திருவள்ளூர் நகரடசியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்து கர்பிணிப் பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கினார்.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 10 மற்றும் 11 ஆம் வார்டுக்ளுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.இந்த முகாமினை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பல்வேறு சான்றிதழ்கள் வேண்டி விண்ணப்பித்த உடன் சான்றிதழ்களையும்,பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு வேண்டிய பட்டா காப்பீட்டு திட்டம் குடும்ப அட்டை ஆதார் கார்டு திருத்தம் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் உடனடியாக செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.பின்னர் பொதுமக்களுக்கு மதிய உணவினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் உதயமலர்பாண்டியன்,நகர் மன்ற கவுன்சிலர்கள் டி.கே.பாபு,ஜான் முன்னாள் சேர்மன் பொன்பாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும்,திமுக நிர்வாகிகளும்,ஏறாளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
