திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6.46 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு கடம்பத்தூர், பேரம்பாக்கம், மப்பேடு, கம்மவார்பாளையம், நுங்கம்பாக்கம், குன்னத்தூர், கசவன்நல்லாத்தூர், திருப்பாச்சூர், ராமஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை, 3,000 ரூபாய் மற்றும் பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு உள்ளிட்ட பரிசுத்தொகுப்பினை வழங்கினார். அப்பொழுது பேசிய அவர் தமிழர் திருநாளான பொங்கல் தினத்தில் ஏழை, எளிய மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் தினத்தை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே தமிழக முதலமைச்சர் இந்த பொங்கல் தொகுப்பினை வழங்கி இருக்கிறார். எனவே அனைத்து மக்களும் சந்தோஷமாக பொங்கலை கொண்டிடுங்கள் என தெரிவித்து பொங்கல் தொகுப்பினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திருவள்ளூரில் குடும்பஅட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பணத்துடன் பரிசுத்தொகுப்பை ஏழை, எளிய மக்களுக்கு V.G.ராஜேந்திரன் வாழ்த்து
-
By Satheesa

- Categories: News
- Tags: district newspongal celebrationtamilnaduthiruvallurV.G. Rajendran
Related Content
கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி
By
Satheesa
May 5, 2026
மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை
By
Satheesa
May 5, 2026
மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி
By
Satheesa
May 5, 2026