அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி குறித்த விவகாரம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்தியாவிடம் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறதாக குற்றம்சாட்டி, அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளது. இதேபோன்று, பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க வரி நடவடிக்கை குறித்து ஆலோசிக்க பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தலைமையில் பிரிக்ஸ் மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய வரிகளை சமாளிக்கும் வழிகள் குறித்தும், அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்தும் இந்த உச்சி மாநாட்டில் விரிவான ஆலோசனை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் இணைந்த கூட்டமைப்பே ‘பிரிக்ஸ்’ ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

















