விழுப்புரம் வி.மருதூர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம் வி.மருதூர் பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை 10.30 மணிக்கு உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வீதி உலா போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிறுவர்களை ராதை கிருஷ்ணன் வேடத்தில் வேஷம் விட்டு அழைத்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
