மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சட்ட விரோதமாக காரைக்கால் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு ; கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபான கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் காவலாதுறை சார்பில் தீவிர மது வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (01.09.2025) பெரம்பூர் காவல் சரகம், கிளியனுர் அருகே காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அரும்பாக்கம் குணசேகரன் மகன் அருண் (28), கழனிவாசல் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் கல்யாணகுமார் (62), ஆகிய இருவரும் காரைக்கால் பகுதியில் இருந்து (TVS APACHE) இருசக்கர வாகனத்தில் பாண்டிச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து 180 மில்லி அளவுள்ள பாண்டிச்சேரி சாராயம் உள்ளடங்கிய 450 எண்ணிக்கையிலான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்ட நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். மேலும் மது கடத்தலுக்கு பயன்படுத்திய சுமார் ரூ.30,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு பொது ஏலம் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சட்டவிரோதமாக மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் சம்மந்தமாக புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 மற்றும் 8870490380 எண்ணிற்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
