சீர்காழி அருகே புத்தூரில் அரசு பேருந்து மோதி தூய்மை பணியாளர் உட்பட இருவர் உயிரிழப்பு. இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதாமல் இருக்க பேருந்து திருப்பியபோது இருவர் மீது மோதிய பேருந்து வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு வீட்டில் மோதி நின்றது. பதற வைக்கும் சிசிடிவி காட்சி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அதிவேகமாக பேருந்து வருவதை அறியாமல் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதி சாலையோரம் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பெண் பணியாளர் மீதும் மோதியது.தொடந்து அருகே இருந்த வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு வீட்டில் மோதி நின்றது. இக்கோர விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த சங்கர்-50 என்பவரும் சாலையோரம் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த புத்தூர் ஊராட்சி துப்புரவு பணியாளர் சரண்யா என்பவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த கொள்ளிடம் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையோரம் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


















