அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது : தமிழகத்திற்கு 2 நாட்கள் மஞ்சள் அலெர்ட்

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது :
செப்டம்பர் 23ஆம் தேதி வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 26ஆம் தேதி வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கமாக தமிழகத்தில் செப்டம்பர் 19 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. 7 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யக்கூடியதால், தமிழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version