வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நாளை கரூரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
வார இறுதி நாட்களில் விஜய் மாநிலம் முழுவதும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். இதில், நாமக்கல்லில் சேலம் சாலையில் உள்ள கே.எஸ். திரையரங்கம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோல், கரூரிலும் விஜய் பிரசாரம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக, கரூர் அருகே உள்ள வேலுச்சாமிபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
சிறப்பம்சமாக, நேற்று அதே இடத்தில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
















