தவெக தலைவர் விஜய் வெளியிட்ட திடீர் வீடியோ… வாக்குரிமை குறித்து எச்சரிக்கை !

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) தொடர்பாக, வாக்குரிமை குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தவெக தலைவர் விஜய் திடீர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கான அபாயத்தை எச்சரிக்கும் விதமாக முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

வீடியோவில் விஜய் கூறியதாவது:
“இந்திய அரசியல் சாசனம் நமக்கெல்லாம் வழங்கிய மிக முக்கியமான உரிமை வாக்குரிமை. வாக்காளர் அடையாள அட்டை என்பது ஒருவர் உயிருடன் இருப்பதற்கான அடையாளம் போன்றது. ஆனால் தற்போது நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தத்தின் காரணமாக, தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அனைவரும், நானும், நீங்களும் உட்பட ஓட்டு போடும் உரிமையை இழக்க நேரிடலாம்,” என்றார்.

என்ன செய்ய வேண்டும்? – விஜய் விளக்கம்

அனைத்து வாக்காளர்களும் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை பூர்த்தி செய்து, தங்களின் பகுதிக்கான பி.எல்.ஓ.(BLO)விடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் அதைச் சரிபாரித்த பிறகே புதிய வாக்காளர் பட்டியல் வெளியாகும்; அதில் பெயர் உள்ளவர்களே வாக்கு செலுத்த முடியும்.

புதிதாக வாக்காளர் சேர்க்கை செய்ய வேண்டியவர்கள் Form-6 படிவத்தை பூரித்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலத்தில் நேரடியாக கொடுக்க வேண்டும்.

சமர்ப்பித்த பிறகு செல்போனில் வரும் குறுஞ்செய்தி மூலம் அடுத்த கட்ட படிவத்தை பூர்த்தி செய்து முடிக்க வேண்டும்.

மிக முக்கியமாக: தங்களுடைய பகுதி பி.எல்.ஓ. யார் என்பதை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று சரிபார்க்க வேண்டும். அவர்களின் செல்போன் எண்களும் அதில் கிடைக்கும்.

விழிப்புணர்வை கூட்டும் முயற்சி

வாக்காளர் பட்டியலில் பெயர் குறைவுகளும், புதிய திருத்த முறையிலும் ஏற்படும் குழப்பங்களையும் கருத்தில் கொண்டு, மக்கள் தங்களின் வாக்குரிமையை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என விஜய் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version