விழுப்புரத்தில் அரசுமருத்துவமனை விஷகடிகளுக்கு போதியமருத்துவ வசதிஏற்படுத்த ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க TVK-தினர் ஆர்பாட்டம்

விழுப்புரத்தில் அரசு மருத்துவமனையில் விஷகடிகளுக்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்,புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அரசு மருத்துவமனைகளில் விஷக்கடிகளுக்கு போதிய மருத்துவ வசதி செய்து தர வேண்டும், கெடார் ,கானை, கருவாச்சி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவ வசதி வழங்க வேண்டும், கெடார் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாவட்ட சுகாதாரத் துறையை கண்டித்தும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தமிழக வெற்றி கழகத்தினர் தென் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வடிவேல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Exit mobile version