திருவள்ளூர் அருகே ஒப்பந்த ஊழியரை ரூ.1, லட்சம் பணம் கேட்டு மிரட்டிய டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தொழில் அதிபர் சீனிவாசன் என்பவர் அரசு கட்டிடங்கள் கட்டும் ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சுற்று சுவர் கட்டி முடித்துள்ளார். இந்த நிலையில் சோழவரம் அடுத்த பூதூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சீனிவாசன் என்பவருடன் சேர்ந்து டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ் என்பவர் தொழில் அதிபர் சீனிவாசனை தொடர்பு கொண்டு பி.டி.ஓ அலுவலகத்தில் கட்டிய சுற்று சுவற்றில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளீர்கள். இது தொடர்பாக செய்தி வெளியிட உள்ளேன். எனவே ரூ.1, லட்சம் பணம் கொடுத்தால் செய்தி வெளியிட மாட்டேன் என பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு தொழில் அதிபர் சீனிவாசன் நான் எந்த தவறும் செய்யாத நிலையில் எதற்கு உங்களுக்கு பயப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை அடுத்து தொழில் அதிபர் சீனிவாசன் தன்னுடைய வழிக்கு வரவில்லை என்று தெரிந்து கொண்ட டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ், மற்றும் வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து கொண்டு. தொழில் அதிபர் சீனிவாசன் மற்றும் சோழவரம் பி.டி.ஓ -க்கள் சாந்தினி, வேதநாயகி உள்ளிட்டவர்கள் பல்வேறு முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளார்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடு.. நடவடிக்கை எடு.. திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு…என சுவர் போஸ்டர்களை பொது இடங்களில் ஒட்டியுள்ளனர். மேலும் ஒட்டப்பட்ட போஸ்டர்களை ஃபோட்டோ எடுத்து தொழில் அதிபருக்கு அனுப்பி மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து தொழில் அதிபர் சீனிவாசன் இது சம்பந்தமாக சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ், மற்றும் வழக்கறிஞர் சீனிவாசன் உள்ளிட்ட இரண்டு பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ் என்பவர் போலி பத்திரிகையின் அடையாள அட்டையுடன் அரசு அலுவலகங்களில் சென்று வசூல் மற்றும் ஸ்லைடு போஸ்ட் செய்திகள் போட்டு அலுவலர்களை மிரட்டி பணம் வசூல் தெரிந்தது. குறிப்பிட தக்கது.

















