சென்னை :
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைவுடன் நேரில் சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) மீண்டும் இணைய அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதனைத் தெளிவாக நிராகரித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
அடையாறில் உள்ள கட்சி தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “பழனிசாமி யார் எங்களை ஏற்றுக்கொள்வார்? ஏற்கனவே NDA-வில் தொடர முடியாது என்பதைக் கடிதம் மூலம் டெல்லி தலைமையிடம் தெரிவித்துவிட்டோம்” எனக் கூறினார்.
அவர் மேலும், “துரோகத்தை வீழ்த்தி எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை மீண்டும் மக்களிடம் கொண்டு வருவதே எங்கள் குறிக்கோள். தேர்தல் களத்தில் விஜயின் தாக்கம், விஜயகாந்தைவிட அதிகம் இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், “NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி தொடரும் வரை எங்கள் முடிவை மாற்றமுடியாது” என தினகரன் மீண்டும் வலியுறுத்தினார்.