மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் அகில இந்திய பொது செயலாளர் திரேந்தர்ஜா பங்கேற்பு:- விபி-கிராம்-ஜி சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்று தீர்மானம்:-

விபி-கிராம்-ஜி சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்று மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் நடைபெற்ற பெருந்திரள் கருத்தரங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அகில இந்திய பொது செயலாளர் திரேந்தர்ஜா, அகில இந்திய தலைவர் சத்தியதேவ் ராம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.
இக்கருத்தரங்கில்;, விபி-கிராம்-ஜி சட்டம், 4 தொழிலாளர் சட்டத்தொகுப்புகள், விதைகள் சட்டம், மின்சார திருத்த சட்டம், அணுமின் உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைக்கும் சட்டங்களை எதிர்த்து பிப்.12-ல் நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை பழையபடி நடைமுறைப்படுத்தி அதனை பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்தி, 200 நாள்களுக்கு ரூ.700 நாள்கூலி வழங்க வேண்டும், இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தொடர் பரப்புரைகளை மேற்கொள்வது. கிராமப்புற மக்களின் வீட்டுமனை, வீடு உரிமையை அடிப்படை உரிமையாக்கி சட்டம் இயற்ற வேண்டும், குறைந்தபட்ச கூலி சட்டத்தை கொண்டு வந்து, விவசாய கிராமப்புற தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாள் கூலியை ரூ.700 ஆக அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் நுண்கடன் நிறுவனங்களிடம் கிராமப்புற தொழிலாளர்கள், விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்திட வேண்டும்.
அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட விவசாய தொழிலாளர் அமைப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் விபி-கிராம்-ஜி சட்டம் வேண்டாம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் வேண்டும் என இயக்கம் நடத்தி வரும் நிலையில் இந்த தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்பதுடன், தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளுக்கு எதிராகவும் நடப்புக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுவை வலியுறுத்துவது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Exit mobile version