கொடைக்கானலில் தொடர்விடுமுறை காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு, கொடைக்கானல் நுழைவுவாயில் சோதனை சாவடியில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக மலை சாலையில் அணிவகுத்து செல்லும் சுற்றுலாப்பயணிகளின் நூற்றுக்கணக்கான வாகனங்கள்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம், இந்நிலையில் இன்று குடியரசு தினம் மற்றும் சனி,ஞாயிறு விடுமுறை உள்ளிட்ட தொடர்விடுமுறை காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்து காணப்படுகிறது, குறிப்பாக கொடைக்கானல் நுழைவுவாயில் சோதனை சாவடியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வாகனங்கள் மலைச்சலையில் ஊர்ந்தப்படி பயணம் மேற்கொள்கின்றனர்.
மேலும் நகர்ப்பகுதிகளாக உள்ள மூஞ்சிக்கல், ஏரிச்சாலை,உகார்த்தேநகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது, இதனால் பொதுமக்களும்,சுற்றுலாப்பயணிகளும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தாமதமாக சென்று வருகின்றனர், மேலும் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்…
சென்னை,பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் காலை 8 மணிக்கு நகருக்குள் வருவது வழக்கம், ஆனால் தற்பொது தொடர் விடுமுறையால் நண்பகல் 12 மணிக்கு வருவதும் குறிப்பிடத்தக்கது
