- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, முன்னாள் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா, தற்போதைய தலைமைச்செயலாளர் முருகானந்தம் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகி மன்னிப்பு கோரினர்.
- கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் 102, இன்று உடல்நல குறைவால் காலமானார்.
- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
- பணம் மூட்டை சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய 200க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.
- ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில், நாங்கள் உண்மையின் பக்கம் இருக்க விரும்புகிறோம் என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
- அரசியல் பிரச்னைகளில் அமலாக்கத்துறை ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கேள்வி எழுப்பி உள்ளார்.
- தமிழகத்தில் இதுவரை இடிந்து விழுந்த அரசுப் பள்ளிக் கட்டடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் யார், அவர்கள் மீது தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதைப் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
- 2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (பிடே) அறிவித்து உள்ளது.
- பா.ஜ., – அ.தி.மு.க., கூட்டணி உருவான நாளில் இருந்து முதல்வரின் உருவமே மாறி விட்டது. தி.மு.க.,வினர் ஒரு பதற்றத்தில் இருக்கின்றனர், என்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- கொச்சியில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது; எனினும், அசம்பாவிதம் இன்றி விமானம் தரை இறங்கியது.