- சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் 217 பேர் கடும் அவதி அடைந்தனர்.
- ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையை நிராகரிக்கிறோம், என இந்திய விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
- தமிழக பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் ‘ப’ வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வகுப்பறையில் கடைசி பெஞ்ச் என்று எதுவும் இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீசார் விசாரணையின் போது மரணமடைந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது. விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி., மோகித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்து பேசிக் கொண்டிருந்தார், என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
- பா.ம.க., எதிர்காலம் நான் தான். சிங்கத்தின் கால்கள் பழுதுபடாது என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 2026ல் தி.மு.க., கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும் என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- விமானிகளின் கடைசி நிமிட சம்பாஷணைகளை வைத்து ஆமதாபாத் விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்று முடிவுக்கு வரவேண்டாம் என்று மத்திய அரசு கூறி உள்ளது.
- இந்தியா 2 சக்திகளை கொண்டுள்ளது. ஒன்று மக்கள்தொகை, மற்றொன்று ஜனநாயகம் என உலகம் நம்புகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் போட்டியை நடிகை ஜான்வி கபூர், அவரது ஆண் நண்பருடன் ரசித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் 12-07-2025
