இன்றைய ராசிபலன் – ஜூலை 24, 2025 (வியாழக்கிழமை)

ஜூலை 24, 2025, வியாழக்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி நேயர்களே!

இன்றைய நாள் சிறப்பான நாளாக உள்ளது. வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள்.
பணிகளில் மன நிறைவான நாளாக அமையும். கொடுக்கல் வாங்கலில் திருப்தி தரும். பண விஷயங்களில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள். ஆரோக்கியத்தில் திருப்திகரமான மனநிலை ஏற்படும். சொத்து சேர்க்கும் எண்ணம் ஏற்படும். தூரத்துப் பயணம் நன்மையை தரும்.

ரிஷப ராசி நேயர்களே!

வியாபாரத்தில் போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்று நாளில் சற்று கவனம் தேவை. பண விஷயங்கள் அவ்வளவு திருப்தி தராது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை இல்லையென்றால் வீண் செலவுகள் ஏற்பட்டு பண இழப்பை பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் எதையும் மறைக்க வேண்டாம். பணியிடங்களில் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது மன அமைதியை கொடுக்கும். துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

மிதுன ராசி நேயர்களே!


தேவையற்ற இடங்களில் அலைவதை குறைக்க வேண்டும்.
இன்று பணியிடங்களில் சிறிது தொய்வு ஏற்பட்டு பின்பு அதை சரி செய்வீர்கள். இன்று நாள் முழுவதும் மனவலிமையோடு செயல்படுவது அந்த நாளை சிறப்பாகும். பணம் ஓரளவு திருப்தியை தரும். துணையுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டிலிருந்து நற்செய்திகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு தடங்கல்கள் உண்டாகும்.

கடக ராசி நேயர்களே!

இன்றைய நாள் ஓரளவு அதிர்ஷ்டத்தை தரும் நாளாக அமையப் அமையும். தொழிலில் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணிகளை சிறப்பாக செய்ய இன்று நல்ல நாளாக அமையும். துணையுடன் மகிழ்ச்சியை உணர்வீர்கள். நிதி நிலைமைகளை ஓரளவு சமாளிப்பீர்கள். ஆரோக்கியம் திருப்தி தரும். மாணவர்கள் நன்மதிப்பை பெறுவார்கள். சொத்து வாங்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். இந்த நாளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிம்ம ராசி நேயர்களே!

புதிய முயற்சிக்கான செயல்களை செய்து இன்றைய நாளை சிறப்பாகலாம். இன்று சற்று மன நிம்மதியை தரும் நாளாக இருக்கும். மேல் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள். உங்கள் துணையால் நன்மதிப்பு ஏற்படும். இன்று இறை வழிபாடு மன அமைதியை தரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். பண விஷயங்களில் ஓரளவு திருப்தியை தரும். வெளியூர் பயணங்கள் நன்மைகளை தரும்.

கன்னி ராசி நேயர்களே!

வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை போல் நல்ல லாபம் பெறுவீர்கள். இன்று நாள் முழுவதும் இறைவழிபாட்டில் திளைப்பீர்கள். சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. ஆசிரியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். தூரப் பயணங்கள் இன்று ஓர் அளவு நன்மையை தரும். வெளிநாட்டிலிருந்து ஓரிரு நாட்களில் நற்செய்திகளை எதிர்பார்க்கலாம். பண விஷயங்களில் இழுபறி நிலவும். ஆரோக்கியம் திருப்தியை தரும் துணையுடன் அனுசரித்து நடக்கவும்.

துலாம் ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் ஒரு அளவு சிறப்பான நாளாக அமையும். வியாபாரத்தில் கவனத்தை செலுத்துவீர்கள். ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம். பயணங்களால் இன்று அனுகூலம் ஏற்படும். அது தேவை இல்லாத பிரச்சனைகளை உருவாக்கும். இன்று இறைவழிப்பாடு இந்த நாளை சிறப்பாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பண விஷயங்களில் ஓரளவு திருப்தியை தரும். ஆரோக்கியம் மேம்படும் மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.

விருச்சிக ராசி நேயர்களே!

இன்று அதிர்ஷ்டமான நாள் வாழ்வில் முன்னேற்றங்கள் பற்றி யோசிக்கும் நாளாக அமையும்.
எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.
துணையுடன் திருப்திகரமான நாளாக அமையும். பண விஷயங்களில் ஓரளவு திருப்தியை தரும். ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களை எடுப்பார்கள். வெளிநாட்டு வேலையில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்கள் சொல்க்கு மதிப்பு உயரும். கூட இருக்கும் சொந்தங்கள் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

தனுசு ராசி நேயர்களே!

தொழிலில் நீங்கள் நினைத்தது போலவே லாபத்தை பெறுவீர்கள். புதிய யுக்திகளை கையாள வேண்டும்.
மனவலிமை ஏற்படும் அதனால் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும் அதை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னுக்கு வருவீர்கள். பண விஷயங்களில் திருப்தியை தரும். துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள். ஆசிரியர்களிடம் நல் மதிப்பை பெறுவார்கள். வேலைகளில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு பின்பு மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

மகர ராசி நேயர்களே!

இன்று மன அமைதியுடன் தொடங்குங்கள் அது நாளை சிறப்பாகும். வியாபாரத்தில் சிறு தடைகள் ஏற்படும் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்லவும். இறைவழிபாடு நல்ல பலனை தரும். பண விஷயம் இழுபறியாக இருக்கும். துணையுடன் இன்று ஓரளவு மன நிம்மதியுடன் செல்லும். மேலதிகாரிகள் உங்களிடம் கடுமையாக வேலை வாங்குவதில் முயற்சிப்பார்கள். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருந்து படிக்க வேண்டிய கால நேரம். வரவுக்கு மீறி செலவு செய்து கடினமான சூழ்நிலையை உருவாக்க வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும்.

கும்ப ராசி நேயர்களே!

தொழிலில் நீங்கள் நினைத்தது போலவே இலக்கை அடைவீர்கள். மன மகிழ்ச்சியுடன் லாபத்தை பெறுவீர்கள்.
இன்றைய நாள் பெரும் அதிர்ஷ்டத்தை தரும் நாளாக அமையும்.
முன்னேற்றமான பாதையில் அடி எடுத்து வைப்பீர்கள். மாணவர்கள் ஆசிரியரிடம் நன் மதிப்பை பெற்று பாராட்டுகளை வாங்குவீர்கள். பண விஷயங்களில் நல்ல திருப்தியான சூழ்நிலை உருவாகும். துணைவியார் இன்று ஓரளவு உங்களை அனுசரித்து புரிந்து கொள்வார். ஆரோக்கியம் ஒரு அளவு சிறப்பாக இருக்கும்.

மீன ராசி நேயர்களே!

இன்று நீங்கள் நினைத்தது போலவே எல்லா விஷயங்களும் நிறைவேறும் நாளாக அமைகிறது. பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். இன்று புதிய சிந்தனைகள் கனவுகளை நினைவாக்கும். அதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள். மாணவர்கள் ஆசிரியரின் பாராட்டை பெறுவார்கள். தொழிலில் ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம். கணவன் மனைவி இன்று ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்கள்.
வெளிநாட்டு பயணம் நன்மையை தரும். மொத்தத்தில் இன்றைய நாள் சிறப்பான அதிர்ஷ்டமான நாளாக அமையும்.

Exit mobile version