ஜூலை 22, 2025, செவ்வாய்க்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.
மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி நேயர்களே!
புதியவற்றைக் கற்றுக் கொள்வீர்கள். வரவு செலவுகளில் இழு பரிக் குறையும்.
அன்றாட வேலைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் அது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும்.
இன்று அரசாங்கத்தின் மூலம் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கவனமாக படிக்க வேண்டும் வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
- அஸ்வினி : அலைச்சல்
- பரணி : வேலையில் கவனம் தேவை
- கிருத்திகை : ஆதாயம் பெறும் நாள்.
ரிஷப ராசி நேயர்களே!
இன்று குடும்பத்துடன் நேரத்தை செல வழிப்பீர்கள். எல்லா விஷயங்களும் உங்களுக்கு லாபமாக அமையும்.
இன்று வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர்களை எடுப்பீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் இன்று நாள் உற்சாகமாக இருக்கும். இனி புதிய பொருட்கள் கைக்கு வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் பொதுவாக இன்று நான் சிறப்பானதாக உள்ளது. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும் வாழ்க்கை துணையுடன் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும்
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
- வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- கிருத்திகை : இன்பமான நாள்
- ரோகிணி : மகிழ்ச்சி உண்டாகும்
- மிருகசீரிஷம் : சன்மானம் உண்டாகும்
மிதுன ராசி நேயர்களே!
இன்றைய நாள் சிறப்பாக அமையும் நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் முடிக்கும் மனநிலை பெறுவீர்கள் உங்கள் துணையிடமிருந்து ஆதரவு உண்டு.
இன்று கோயிலுக்கு செல்வதால் மன நிறைவு ஏற்படும் பண விஷயங்கள் இன்று தேவைக்கு மீறி கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள் உதவி கரம் நீட்டுவார்கள் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் இந்த உற்சாகமாக இருப்பதால் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகளை ஒரு இரு நாட்கள் தள்ளி போடுதல் நலம்.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று பெருமாள் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
- மிருகசீரிஷம் : முயற்சி
- திருவாதிரை : பேச்சில் கவனம் தேவை
- புனர்பூசம் : அமைதியான நாள்
கடக ராசி நேயர்களே!
மாணவர்கள் படிப்பில் கவனத்தை தொடர்ந்து செலுத்த வேண்டும். வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டு மாலையில் ஓரளவு வருமானம் ஈட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் வாக்குறுதிகளை தர வேண்டாம். வெளிநாட்டு செய்தி நன்மையை தரும்.
புதிய இடங்களினால் மாற்றம் உண்டாகும்.
ஆடம்பர பொருளை சேகரிக்க யோசிப்பீர்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் உண்டாகும்.
தங்களுக்கு மேல் பணி புரியும் அதிகாரியிடம் பொறுமையுடன் நடப்பது மன நிம்மதியை கொடுக்கும்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று துர்க்கை வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
- புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்
- பூசம் : மகிழ்ச்சி தரும்
- ஆயில்யம் : ஆதாயம் அடைவீர்கள்.
சிம்ம ராசி நேயர்களே!
மாற்றம் ஒன்றே மாறாதது புதிய மாற்றங்களை பெறுவீர்கள் அதில் ஆபத்தை தருவதாக அமையும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். பொறுப்புகள் கூடுவதால் செலவுகளும் அதிகரிக்கும். மனதில் சில குழப்பங்கள் ஏற்படும். துணையுடன் சிறு சிறு மன குழப்பங்கள் ஏற்படும். உடல்நலையில் அக்கறை தேவை. குதிகால் வலி ஏற்படும். தொழிலில் குழப்பங்கள் இருந்தாலும் மிதமான லாபம் அடையலாம். கடன் விவகாரங்களில் இழுப்பறி நிலவும்.
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சூரிய வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
- மகம் : மன நிம்மதி
- பூரம் : மகிழ்ச்சி
- உத்திரம் : உற்சாகமான நாள்
கன்னி ராசி நேயர்களே!
நல்ல சிறு பிரச்சனைகள் உருவாகி மறையும்.
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று அனுசரித்து செல்வது நல்லது.
வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும் அதனால் மேல் அதிகாரிகளிடம் ஆதாயத்தை பெறுவீர்கள்.
மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவார்கள் பெற்றோர்களுக்கு மன நிறைவை தரும்
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- உத்திரம் : எடுத்த காரியம் நிறைவேறும்
- ஹஸ்தம் : மகிழ்ச்சி நிலவும்
- சித்திரை : ஆதாயம் கிடைக்கும்
துலாம் ராசி நேயர்களே!
தொட்டதெல்லாம் பொன்னாகும் நாளாக அமையப்போகிறது.
எல்லா செயல்களிலும் வெற்றியை நோக்கி முன்னேறுவீர்கள். புதிய திட்டங்களும் அதற்கான வாய்ப்புகளும் அமையும். நீண்டதொரு காரியங்கள் வெற்றி பெறும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பார். ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படுகிறது. மூன்றாம் மனிதனின் செயல்களில் தலையிட வேண்டாம். உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் லாபத்தை எதிர்பார்க்கலாம். மனம் பல வழிகளில் அலைபாய வாய்ப்பு உள்ளது மனதை கட்டுப்படுத்தும் பழக வேண்டும்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
- வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- சித்திரை : மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
- சுவாதி : புதிய வாய்ப்புகள் தேடி வரும். விசாகம் : காரியம் வெற்றி அடையும்.
- விசாகம் : ஓரளவு ஆதாயமான நாள்
விருச்சிக ராசி நேயர்களே!
மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவார்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் வேலையிலும் கவனமாக இருக்க வேண்டும். சில முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
உங்கள் துணைவாரிடம் அன்பாகவும் ஆதரவாகவும் நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் சிறு சிறு சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. முன்கோவத்தை குறைக்க வேண்டும் தியானம் மேற்கொள்ளலாம்.
பண விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்
- விசாகம் : வியாபாரத்தில் திருப்தி.
- அனுஷம் : நினைத்ததை அடைவீர்கள்.
- கேட்டை : சொத்துக்கள் சேர்ப்பீர்கள்.
தனுசு ராசி நேயர்களே!
தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.
இன்றைய நாள் கடினம் முயற்சி தேவைப்படும் நாள்.
பல விஷயங்களில் கவனமாக இருப்பதும் நல்லது.
துணையுடன் ஒத்துப் போவது பிரச்சனைகளை குறைக்கும்.
தொழில் செய்யும் இடத்தில் அமைதியாக இருந்தால் சாதிக்கலாம்.
மன அமைதி குறைவாக இருக்கும் தியானம் மேற்கொள்வது சிறந்த பயனைத் தரும்.
பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை புதிய சிந்தனைகள் தோன்றும்
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
- வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- மூலம் : அலைச்சல் பூராடம் : பொறுமை உத்திராடம் : நிம்மதி
- பூராடம் : பொறுமை உத்திராடம் : நிம்மதி
- உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
மகர ராசி நேயர்களே!
இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சிகரமான நாளாக அமையும்.
புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும் அவற்றை செயல்படுத்துவீர்கள். இறை துணையால் உங்களுடைய நீண்ட நாள் ஒரு காரியம் நிறைவேறும். தூரப்பயணம் நன்மையில் முடியும் உறவுகளிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். செய்யும் தொழில் லாபங்களை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்தி ஆசிரியரிடம் நன்மதிப்பை பெறுவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பண வரவுகளில் திருப்தி ஏற்படும். மொத்தத்தில் பொதுவாக நன்மை தரும் நாள்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- உத்திராடம் : மகிழ்ச்சி பொங்கும்.
- திருவோணம் : அதிர்ஷ்டமான நாள்.
- அவிட்டம் : நிம்மதி உணர்வீர்கள்.
கும்ப ராசி நேயர்களே!
விலைமதிப்புள்ள பொருள்களை சேர்க்க முற்படுவீர்கள். வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பெயரும் புகழும் கிடைக்கும். பண விஷயங்களை நிறைவு காண்பீர்கள். ஆரோக்கியமும் நிறைவோடு இருக்கும்.
ஒரு வாழ்க்கைக்கு முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். துணையுடன் மனக்குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். முயற்சிகள் திருப்திகரமாக அமையும் நாள் மொத்தத்தில் ஓரளவு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையும்
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- வழி பட வேண்டிய தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு இந்த நாளை சிறப்பாக ஆக்கும்
- அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
- சதயம் : உற்சகமான நாள்.
- பூரட்டாதி : நினைத்ததை சாதிப்பீர்கள்.
மீன ராசி நேயர்களே!
புதிய முயற்சிக்கு மனதை செலுத்துவீர்கள் அந்த முயற்சி வெற்றியை தரும்.
வீடு வாங்கும் யோகம் அமையும். இன்றைக்கு பணவரவில் குறைவிருக்காது. குடும்பத்தில் நிம்மதி நிலவும். வேலை செய்யும் இடத்தில் வேலை பளு அதிகமாகும். உடல் நலனிலும் நல்ல முன்னேற்றம் உண்டு. மனக்குழப்பம் உடலிலும் பிரதிபலிக்கும். தூரத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : அம்பிகை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- பூரட்டாதி : கவனம் தேவை.
- உத்திரட்டாதி : உரிமை கடைபிடிக்க வேண்டும்
- ரேவதி : மன அமைதி.