ஸ்ரீ விசுவாவசு புரட்டாசி மாதம் 4 ஆம் தேதி
செப்டம்பர் 20, 2025 சனிக்கிழமை, இன்றைய நட்சத்திரம் – மகம் நட்சத்திரம்
நல்ல நேரம் : காலை 10. 45 முதல் 11.45 வரை மாலை 04.45 முதல் 05.45 வரை
ராகு காலம் : காலை 09.00 மணி முதல் 10.30 வரை
எமகண்டம் : மதியம் 01.30 முதல் மதியம் 03:00 மணி வரை
குளிகை நேரம் : காலை 06:00 மணி முதல் காலை 07.30 மணி வரை
மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தருகிறார், ஜோதிடர் T. J சுந்தரபாண்டி அவர்கள்.
மேஷ ராசி நேயர்களே!

ராசிக்கு 5 ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் அப்பா வழி உறவுகள் மூலமாக மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு குலதெய்வத்தின் அருளால் இன்று நீங்கள் எதிர்பார்க்காத மிகப்பெரிய முன்னேற்றம் உண்டு கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் உண்டு பெண்கள் மூலமாக இன்று உங்களுக்கு ஆதாயம் உண்டு மாணவச் செல்வங்கள் படிப்பில் மிக அக்கறை காட்டுவார்கள் நல்ல மதிப்பெண் பெறுவதற்கான சூழ்நிலைகள் உண்டு அக்கம் பக்கத்தினர்கள் உதவிகள் ஏற்படும் வியாபாரிகளுக்கு இன்றைய நாளில் வருமானம் அதிகமாவதற்கும் புதிய வாடிக்கையாளர்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
- வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை அம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
ரிஷப ராசி நேயர்களே!

சந்திர பகவான் ராசிக்கு நான்காம் இடத்தில் பயணம் செய்வதினால் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள் இளைஞர்களுக்கு இன்றைய நாளில் புதிய வேலைவாய்ப்புக்கான மாற்றத்திற்குரிய நாள் உங்களுடைய அப்பா வழி உறவிலிருந்து உதவி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு பழைய நண்பர்கள் மூலமாக உயர்ந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு அவர்களை சந்திப்பது மூலமாக உங்களுடைய எதிர்கால திட்டங்களை தீட்டுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
மிதுன ராசி நேயர்களே!

சந்திர பகவான் ராசி 3 வீட்டில் பயணம் செய்கிறார் வண்டி& வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் எடுக்கலாம் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் அம்மாவழி உறவுகள் மூலமாக பொருளாதார ரீதியான முன்னேற்றங்களில் ஏற்படும் இன்று குலதெய்வ வழிபாடு பின்பற்றுவீர்கள்
தாய் மாமாஉறவுக்கும் உங்களுக்கும் இணக்கமான அன்பு ஏற்படும் அவர்கள் மூலமாக முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும் இன்றைய நாளில் உங்களுடைய சந்தோசத்துக்கான செயல்பாடுகளில் அதிகம் மேற்கொள்வீர்கள் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது அக்கம் பக்கத்தினரிடம் பேச்சுவார்த்தைகளில் கவனம் தேவை யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்கக் கூடாது.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழிபட வேண்டிய தெய்வம் : வீரபத்திரர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கடக ராசி நேயர்களே!

ராசிக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார் வீடு மனை கட்டுவதற்கான வாய்ப்பு உண்டு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டு உங்களிடம் கடன் பெற்றவர்கள் அல்லது உங்களிடம் பணம் தருகிறேன் என்று கூறியவர்கள் உறுதியாக உங்களைத் தேடி வந்து கொடுப்பதற்கான சூழ்நிலை உருவாகும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்து மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவீர்கள் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் உண்டு அம்மாவை ரொம்ப நாளுக்காக சந்திக்கவில்லை என்றால் தற்போது சந்திக்க வாய்ப்புகள் ஏற்படும் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என வருத்தமும் கவலையும் இருந்தால் உறுதியாக இன்று நிறைவேற்றுவீர்கள் உங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்க அதிக கவனம் செலுத்துவீர்கள் ஆரம்ப கல்வி படிக்கும் மாணவச் செல்வங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் நல்ல மாணவ மாணவியர் என பாராட்டு பெறுவதற்கான வாய்ப்பு உண்டு ஏற்படும்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
- வழி பட வேண்டிய தெய்வம் : சண்டிகேஸ்வர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
சிம்ம ராசி நேயர்களே!

ராசிக்கு ஒன்றாம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் தன வரவுகள் சிறப்பாக இருக்கும் வயது மூத்தவர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு இரண்டாவது திருமணத்திற்கான முயற்சிகள் மேற்கொள்வர்களுக்கு உங்களுக்கேற்ற வரன் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு கல்லூரி மாணவ மாணவிகள் அதிகமான மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய செயல்பாடுகள் ஏற்படும் காதலர்களுக்கு இன்றைய நாளில் சிறப்பான நன்மைகள் உண்டு அப்பாவழி உறவுகள் மூலமாக புதிய திட்டம் நிறைவேறும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு புதிய வண்டி வானங்களில் வாகனங்கள் வாங்க சரியான நேரம்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழிபட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கன்னி ராசி நேயர்களே!

ராசிக்கு 12ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் சுப விரய செலவுகள் உண்டாகும் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது மூலமாக நன்மை ஏற்படும். சாலையோர வியாபாரிகள் மேலும் அலைந்து திரிந்து ஓரிடத்தில் இல்லாமல் மற்ற இடங்களில் சென்று வேலை பார்க்கும் நபர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வாகனத்தில் உள்ள பழுதுகளை என்று சரி செய்வீர்கள் குழந்தைகளால் மதிப்பும் அங்கீகாரமும் உங்களுக்கு கிடைக்கும் நிலுவையில் இருந்து வந்த பழைய சரக்கு விற்பனையாகும் உடன் இருப்பவரிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் மனதில் புதுமையான சிந்தனைகள் அதிகமான கற்பனையான ஆற்றல்கள் உருவாகும் சூழ்நிலை ஏற்படும் அப்படிப்பட்ட சமயங்களில் மனதை ஒருநிலைப்படுத்துவது மூலமாக நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : வீரபத்திரர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
துலாம் ராசி நேயர்களே!

துலாம் ராசி நேயர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு 11 ஆம் இடத்தில் பயணம் செய்யும் காலம் இன்று உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும் உங்களை விட வயது மூத்தவர்களிடம் இருந்து அன்பும் பாசமும் அதிகமாக கிடைக்கும் தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பான லாபங்கள் உருவாகும் பெண்களுக்கு மனமகிழ்ச்சிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு மாணவர் செல்வங்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள் முதன்மையான மாணவனாக பெயரும் புகழும் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உண்டு.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் கோவில் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
விருச்சிக ராசி நேயர்களே!

விருச்சகம் ராசி நேயர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் பயணம் செய்கிறார் பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு வேலையில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டு புதிய தொழில் செய்வதற்கான முயற்சிகள் எடுப்பீர்கள் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மற்றொரு தொழில் உருவாக்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகும் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சிறப்பாக நடைபெறும் மனதுக்கு பிடித்த வரன் அமையும் பெண்களுக்கு திறமைகள் மூலமாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் மாணவ மாணவிகள் படிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை அடைய முடியும் புதிய கடன் வாங்காமல் இருப்பது நல்லது கடன் சுமைகள் படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு உண்டு இளைய சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் உங்களுடன் வேலை பார்க்கும் சக தோழர் தோழிகள் உங்களுடைய வெற்றிக்கான முயற்சியில் உதவியாக இருப்பார்கள்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
- வழி பட வேண்டிய தெய்வம் : பொன் இருளப்பசாமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.
தனுசு ராசி நேயர்களே!

தனுசு ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 9ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் இன்றைய நாளில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலுமே மகிழ்ச்சிகள் அதிகமாக நிறைந்திருக்கும் மேலும் உங்களுடைய குலதெய்வ கோவில் வழிபாடு இன்று செய்வதற்கான பாக்கியம் உருவாகும் உங்களுடைய குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும் தேவையில்லாத இடையூறுகள் பிரச்சனைகள் மன அழுத்தங்கள் ஆகியவை விலகி குதூகூலமாக உங்களுடைய அத்தனை விதமான செயல்பாடுகளின் மகிழ்ச்சியுடன் முடிப்பீர்கள் என்று பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : குலதெய்வ வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மகர ராசி நேயர்களே!

மகர ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்வதனால் புதிய முயற்சிகள் எடுபடுவதை தவிர்க்க வேண்டும் வீண் விவாதங்கள் மற்றும் போட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது வண்டி வானங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் பத்திரத்தில் கையெழுத்துக்கள் இடுவதில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ அல்லது வாக்கு கொடுப்பது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது பெண்கள் தன்னுடன் இருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் பொருளாதார ரீதியான சூழ்நிலைகளில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும் தொழிலில் அதிக அக்கறை செலுத்தினால் லாபம் உண்டு இன்றைய சந்திராஷ்டம நட்சத்திரம் திருவாதிரை திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் உறுதியாக இன்று காலையில் விநாயகர் வழிபாடு செய்த பிறகு எந்த விஷயத்தில் தொடங்க வேண்டும்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : குலதெய்வ வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கும்ப ராசி நேயர்களே!

கும்ப ராசி ஏழாம் இடத்தில் சந்திர பகவான் இன்று பயணம் செய்கிறார் கணவன்& மனைவி புரிதல் அதிகமாகும் உங்களை புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் மீண்டும் உங்களை புரிந்து கொண்டு உங்களிடம் சேர்வதற்கான அன்பு செலுத்துவதற்கான வாய்ப்பு உண்டு புதிய புதிய வாடிக்கையாளர்கள் உங்களுடைய அலுவலகம் அல்லது நிர்வாகத்திற்கு வருவார்கள் அவர்களுடைய வருகையினால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு உற்சாகங்கள் அதிகமாகும் தேவையில்லாத நபர்களால் ஏற்பட்ட குழப்பம் கஷ்டங்கள் இன்று விலகும்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : காளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மீன ராசி நேயர்களே!

மீன ராசி அன்பர்களுக்கு ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் வேலை நிமித்தமான செயல்பாடுகளில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ள கவலைகள் நீங்கும் பொருளாதார முன்னேற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போவது சிறப்பு பெண்களுக்கு வயிறு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் தொழிலில் இருப்பவர்கள் மிக கவனமான முறையில் வேலை செய்ய வேண்டும் நட்பு உறவுகளிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
- வழி பட வேண்டிய தெய்வம் : காலபைரவர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.