ஆகஸ்ட் 06, 2025, புதன்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார், ‘தத்புருஷ சிவ. சண்முகபிரியா, ஸ்ரீ காமாட்சி ஜோதிடம் & ஆராய்ச்சி மையம்.
மேஷ ராசி நேயர்களே!

இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் நாளாக அமைய வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு லாபத்தை அடைவீர்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள் நீண்ட நாள் பயணம் எண்ணங்கள் நிறைவேறும் துணையுடன் அனுசரித்து நடப்பீர்கள் வாழ்க்கையை புதிய கோணத்தில் யோசிக்க உங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தரும் மாணவர்கள் படிப்பில் தொடர்ந்து கவனத்தை செலுத்துவார்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் பெரிய முன்னேற்றங்கள் இல்லை என்றாலும் இன்றைய நாள் ஓரளவு சிறப்பானதாக அமையும்.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
ரிஷப ராசி நேயர்களே!

கலை ஆர்வமும் அதை செயல்படுத்தும் திறமையும் கொண்டவர்கள்.
உங்களுடைய புது முயற்சிகளை மேற்கொள்வதற்கு இது சரியான நேரமாக அமையப் போகிறது துணையுடன் அனுசரித்து நடக்க வேண்டும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை நீண்ட நாள் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள் அது உங்களுக்கு வருவாயை ஈட்டி தரும்.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
மிதுன ராசி நேயர்களே!

உழைப்பு மட்டுமே உங்கள் மூலதனமாக செயல்படுவீர்கள் உங்கள் திறமைகளை உங்கள் வேலையில் தெரியும் உங்கள் மேல் அதிகாரி உங்களை பாராட்டுவார் குறித்த நேரத்தில் குறித்த வேலைகளை செய்து முடிப்பீர்கள் அது உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் துணையுடன் அனுசரித்துச் செல்லவும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பானதாக இருக்கும் தொண்டையில் வலி ஏற்பட்டு மறையும்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று பெருமாள் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
கடக ராசி நேயர்களே!

வாழ்க்கையில் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள் இன்றைய நாள் இறை வழிபாடு உங்களை மனதிருத்துடன் வைத்திருக்க உதவும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதனை போராடி வெற்றி பெறுவீர்கள் வியாபாரத்தில் ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம்
விவசாயிகளுக்கு ஓரளவு லாபத்தை தரக்கூடிய மாதமாக அமையும் ஆரோக்கியம் மேம்படும் தூர பயணங்கள் நன்மையை தரும்.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று துர்க்கை வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
சிம்ம ராசி நேயர்களே!

எந்த காரியத்தை தொட்டாலும் வெற்றி நமக்காக வரவேண்டும் என்று எண்ணுபவர்கள் அதற்கேற்ற தந்திரங்களை செய்வீர்கள் யாரிடமும் வெளிப்படையாக பேச வேண்டாம் அமைதியை கடைப்பிடித்து காரியத்தில் ஈடுபடுங்கள் வெற்றி உங்களுக்கே ஆரோக்கியம் மனதளவில் குறை உண்டாகலாம் சற்று அமைதியற்ற சூழ்நிலையை உணர்வீர்கள் இறைவழிபாடு உங்களை நல்வழிப்படுத்தும் துணையுடன் அனுசரித்துச் செல்வீர்கள் மாணவர்கள் படைப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் நண்பர்களால் அனுகூலம் உண்டு மொத்தத்தில் ஓரளவு சிறப்பானதாக அமையும்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சூரிய வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
கன்னி ராசி நேயர்களே!

எதையும் ஆராய்ந்து அறிந்து செயல்படுவீர்கள் அது உங்கள் வெற்றிக்கான பாதையை உருவாக்கும் குறித்த நேரத்தில் உங்களுடைய கடமைகளை முடித்து பாராட்டை பெறுவீர்கள் பொன்சேர்க்கை ஏற்படும் சொத்து வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை துணையுடன் அனுசரித்துச் செல்வீர்கள் வியாபாரிகள் ஓரளவு லாபத்தை எதிர்பார்ப்பார்கள்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
துலாம் ராசி நேயர்களே!

எதையும் எடை போட்டு பார்ப்பவர்கள் குறைகளையும் நிறைகளையும் எடை போட்டு பார்க்க வேண்டும் இல்லை என்றால் தேவையற்ற மன குழப்பங்களை சந்திக்க நேரிடும் அனுபவமே சிறந்த ஆசான் என்று பின்பு உணர்வீர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்து இறை இடத்தில் மனதை செலுத்துங்கள் தியானங்களை மேற்கொள்ளுங்கள் இன்று ஓரளவு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கப் போகிறது எதை செய்தாலும் பொறுமையுடனும் நிதானத்தோடு செய்வது உங்களை மன நிம்மதி உடன் வைத்திருக்க உதவும்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
விருச்சிக ராசி நேயர்களே!

யாரையும் மனம் நோகும் படி பேச வேண்டாம். அமைதியை கடைபிடிக்கவும். ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள் துணை உங்களுடன் அனுசரித்துச் செல்வார். வியாபாரிகள் புது யுக்திகளை கையால்வீர்கள்.
நீங்கள் எடுக்கும் எல்லாவிதமான முயற்சிகளுக்கும் பலன் உண்டு, தியானங்களை மேற்கொள்ளுங்கள் அது மன அமைதியை மேம்படுத்தும்.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : லாவண்டர்
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.
தனுசு ராசி நேயர்களே!

இயற்கையிலேயே பொறுமையான சிந்தனையுடையவர்கள் எதையும் ஆழ்ந்து சிந்தித்து அந்த செயலை செய்து முடிப்பீர்கள் அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும் அவ்வப்பொழுது துணையுடன் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். இயற்கையிலே தன்னை பற்றி மட்டுமே யோசிப்பீர்கள் அடுத்தவர்களின் மன நிலைமையும் புரிந்து நடந்தால் நன்மை உண்டாகும்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
- வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மகர ராசி நேயர்களே!

தேவையற்ற விஷயங்களை குறைக்க வேண்டும் பணம் மட்டுமல்ல பொருள் விளையும் ஏற்படும் பல விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது ஆரோக்கியம் மேம்படும் வாழ்க்கை துணையுடன் அனுசரித்துச் செல்வீர்கள் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள் எதையும் முற்போக்கு சிந்தனையுடன் சிந்தித்து செயல்படுவது வாழ்க்கையை வெற்றி பெற உதவும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை போல் லாபத்தை பெறுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கும்ப ராசி நேயர்களே!

நல்ல வாய்ப்புகளை தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொள்வீர்கள் அது உங்களை அடுத்த கட்டத்திற்கு பாதுகாப்பு அளித்துச் செல்ல உதவும் ஆரோக்கியம் சிறக்கும் அமைதியுடனும் பொறுமையுடனும் நடக்க வேண்டும் மீன் விவாதங்களை தவி ர்க்கவும் வியாபாரத்தில் சிறந்த லாபத்தை பெறுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : வைலட்
- வழி பட வேண்டிய தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு இந்த நாளை சிறப்பாக்கும்.
மீன ராசி நேயர்களே!

பொறுமை தேவை எதையும் நிதானத்துடன் செயல்படும் மீன ராசி நேயர்கள் அதை காரியத்தில் காட்டி ஜெயிப்பீர்கள் உங்களுக்கு வெற்றிக்கான சூழ்நிலை உருவாகிறது துணையுடன் அனுசரித்துச் செல்லுங்கள் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துங்கள் தூரப்பயணம் நன்மையை தரும் நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பீர்கள் அது மன மகிழ்ச்சி கொடுக்கும் வியாபாரிகள் ஓரளவு லாபத்தை பெறுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
- வழி பட வேண்டிய தெய்வம் : அம்பிகை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.