ஸ்ரீ விசுவாவசு ஆவணி மாதம் 21 ஆம் தேதி
செப்டம்பர் 06, 2025 சனிக்கிழமை.
நல்ல நேரம்: காலை 10. 45 முதல் 11.45 வரை மாலை 04.45முதல் 05.45 வரை
ராகு காலம்: காலை 9.30 மணி முதல்10.30 வரை
எமகண்டம்: மதியம் 01.30 முதல் மதியம் 03:00 மணி வரை
குளிகை நேரம்: காலை 06:00 மணி முதல் காலை 07.30 மணி வரை
மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.
மேஷ ராசி நேயர்களே!

மேஷ ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 11ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் மாணவ மாணவிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய செயல்பாடுகள் ஏற்படும் காதலர்களுக்கு
மனமகிழ்ச்சிகள் தரக்கூடிய செயல்பாடுகளை செயல்படுத்துவார்கள் அப்பாவழி உறவுகள் மூலமாக புதிய திட்டம் நிறைவேறும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு புதிய வண்டி வாகனங்கள் வாங்க அதிர்ஷ்டமான நாள் உங்களுடைய மனதில் உள்ள கவலைகள் மனதில் உள்ள அழுத்தங்களை உடனிருப்பவர்களிடம் நீங்கள் பகிர்வது மூலமாக உறுதியாக நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படும் இன்றைய நாளில் உங்களுடைய அனைத்து விதமான முயற்சிகளும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தருகின்றன.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : பத்ரகாளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
ரிஷப ராசி நேயர்களே!

ரிஷப ராசி நேயர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் பயணம் செய்கிறார் புதிய தொழில் செய்வதற்கான முயற்சிகள் எடுப்பீர்கள் தொழில் அதிக கவனம் செலுத்துவது மூலமாக முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும் வேலையை கவனமாக பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும் மாணவ மாணவிகள் படிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை அடைய முடியும் பெண்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள் அதன் மூலமாக பல நன்மைகள் ஏற்படும் மாணவர் செல்வங்கள் படிப்பில் முன்னேற்றமான பாதையை நோக்கி பயணிப்பார்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது மூலமாக வெற்றி பெறவும் வாய்ப்புகள் உள்ளது சில நேரங்களில் மனதுக்குப் பிடித்தவர்களிடம் வாக்குவாதம் ஏற்படக்கூடும் சிறிது விட்டுக் கொடுத்துப் போனால் முன்னேற்றமான மகிழ்ச்சியை கொடுக்கும்.
- அதிர்ஷ்ட எண் :
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மிதுன ராசி நேயர்களே!

மிதுன ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 9ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் பெண்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு அப்பாவுடைய சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் தீர்ப்பு வரும் மேலும் மன மகிழ்ச்சியில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கு அதிகநேரம் என்று ஒதுக்குவீர்கள் குழந்தைகள் மூலமாக நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும் உங்கள் குழந்தைகளின் திறமைகளை இன்று அவர்கள் நிரூபிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி படித்தால் உறுதியாக நல்ல மதிப்பெண் பெற்று மரியாதையும் பெறுவீர்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது வெளிநாட்டுக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வெற்றி உண்டு வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
- வழிபட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கடக ராசி நேயர்களே!

கடக ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்கிறார் உங்களுடைய ராசி அதிபதியே எட்டாம் இடத்தில் பயணம் செய்வது நாள் நிதானமாக முடிவு எடுப்பது நல்லது அவசரப்பட்டு எந்த ஒரு விஷயத்திலும் தலையிடவும் அல்லது முடிவெடுக்கவும் கூடாது உங்களுடைய அம்மாவின் ஆசிர்வாதம் முழுமையாக இன்று பெறுவது மூலமாக வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் உண்டு மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு மிக முக்கியமான முடிவுகள் இன்று எடுக்கக் கூடாது பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் எந்த ஒரு அத்தாட்சியும் இல்லாமல் மிகப்பெரிய தொகைகளை பரிமாற்றம் செய்யக்கூடாது வண்டி வாகனங்களில் கவனம் தேவை. இன்றைய நாளில் மாலை பொழுது மேல் உங்களுக்கு எதிர்பார்க்காத நல்ல செய்திகள் நல்லவிதமான முன்னேற்றமான பாதையை உருவாக்க வேண்டிய தன்மைகள் ஏற்படும் இன்றைய சந்திராஷ்டம நட்சத்திரம் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் உறுதியாக இன்று காலையில் மாரியம்மன் வழிபாடு செய்த பிறகு எந்த விஷயத்தில் தொடங்க வேண்டும்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : விநாயகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
சிம்ம ராசி நேயர்களே!

சிம்ம ராசிக்கு ஏழாம் இடத்தில் சந்திர பகவான் இன்று பயணம் செய்கிறார் கணவன்& மனைவி புரிதல் அதிகமாகும் உங்களை புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் மீண்டும் உங்களை புரிந்து கொண்டு உங்களிடம் சேர்வதற்கான அன்பு செலுத்துவதற்கான வாய்ப்பு உண்டு புதிய புதிய வாடிக்கையாளர்கள் உங்களுடைய அலுவலகம் அல்லது நிர்வாகத்திற்கு வருவார்கள் அவர்களுடைய வருகையினால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு உற்சாகங்கள் அதிகமாகும் தேவையில்லாத நபர்களால் ஏற்பட்ட குழப்பம் கஷ்டங்கள் இன்று விலகும்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழிபட வேண்டிய தெய்வம் : காளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கன்னி ராசி நேயர்களே!

கன்னி ராசி அன்பர்களுக்கு ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் வேலை நிமித்தமான செயல்பாடுகளில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ள கவலைகள் நீங்கும் பொருளாதார முன்னேற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போவது சிறப்பு பெண்களுக்கு வயிறு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் தொழிலில் இருப்பவர்கள் மிக கவனமான முறையில் வேலை செய்ய வேண்டும் நட்பு உறவுகளிடம் விட்டுக் கொடுக்கப் போவது நல்லது.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
- வழி பட வேண்டிய தெய்வம் : காலபைரவர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
துலாம் ராசி நேயர்களே!

துலாம் ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு 5 இடத்தில் பயணம் செய்கிறார் உங்களுடன் உள்ள அனைவரும் உங்களிடம் அனுசரித்து செல்வார்கள் குழந்தைகள் மூலமாக முன்னேற்றம் உண்டு பெண்கள் தங்களுக்கு மனதுக்குப் பிடித்த ஆடை ஆபரணங்களை வாங்கிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது, காதலன் காதலி இருவரும் வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்ய நேரிடும் அதன் மூலமாக மனதுக்கு பிடித்த விஷயங்கள் நடக்கும் கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் நல் மதிப்பு பெறுவார்கள்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
- வழி பட வேண்டிய தெய்வம் : காமாட்சி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
விருச்சிக ராசி நேயர்களே!

விருச்சக ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு நான்காம் இடத்தில் பயணம் செய்கிறார் புதிய வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் உண்டு வண்டி வாகனங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் சரியாகிவிடும் அம்மாவழி உறவுகள் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் இன்றைய நாளில் அடுத்த கட்ட ஒரு நல்ல முடிவு எடுப்பீர்கள் உங்களுடைய சந்தோஷத்திற்காக மட்டுமே இன்றைய நாளில் அதிக சிந்தனைகள் வரும் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாக கிடைக்கும் புதிய வாய்ப்புகள் தேடி வரும் மாணவச் செல்வங்கள் படிப்பில் நல்ல முன்னேற்றமான பாதையை நோக்கி பயணிப்பீர்கள் உங்களுடைய அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சனைகள் சரியாகிவிடும் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் உங்களுக்கு உதவி புரிவார்கள்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.
தனுசு ராசி நேயர்களே!

தனுசு ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 3ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் விடாமுயற்சி விஸ்வரூபம் வெற்றி என்ற வார்த்தைக்கு ஏற்றவாறு இன்றைய நாளில் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது அடிப்படை தேவைகளை இன்று நீங்கள் நிறைவேற்றிக் கொள்வீர்கள் இளைய சகோதர சகோதரிகள் மூலமாக அல்லது உங்களுடன் வேலை பார்க்கும் நபர்களில் வயது குறைந்தவர்கள் மூலமாக முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும் மாணவ மாணவியர் படிப்பில் முழு கவனம் செலுத்தினால் முதன்மையான மாணவர்கள் என்று பெயர் வாங்க முடியும் பெண்களுக்கு இன்றைய நாளில் எனக்கு பிடித்த மாதிரி பொருட்களை வாங்கிக் கொள்வது மனதை பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : பத்ரகாளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மகர ராசி நேயர்களே!

மகர ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தில் பயணம் செய்வது மூலமாக குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு நீங்கள் இன்று சேமிப்புக்காக கொஞ்சம் நேரத்தையும் ஒதுக்க வேண்டும் பெண்களுக்கு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று வர தாய் வழி உறவுகளை சந்திக்க வாய்ப்பு உண்டாகும் கடன் சுமையிலிருந்து மீள்வதற்கான அமைப்பு உண்டு.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கும்ப ராசி நேயர்களே!

கும்ப ராசி அன்பர்களுக்கு ராசியில் சந்திர பகவான் பயணிக்கும் இந்நாளில் மனதில் பல சிந்தனைகள் வந்து வந்து போகும் உங்களுக்கும் அம்மாவுக்கும் உள்ள இடைவெளி குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சனைகள் சரியாகி நல்ல மாற்றம் உண்டாகும் மக்கள் தொடர்பு சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாகும் பதவி உயர்வு உண்டு அரசாங்க வேலையில் பணிபுரிவர்களுக்கு உயர்ந்த நிலை ஏற்படும் பேப்பர் ஸ்டோர் பேங்க் ஐ டி துறை சார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றமான தன்மை உண்டு
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : விநாயகர் வழிபாடு இந்த நாளை சிறப்பாக ஆக்கும்.
மீன ராசி நேயர்களே!

மீன ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 12ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் பொதுவாகவே நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் செயல்பாடுகளையும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும் புதிய நபர்கள் யாரேனும் உங்களுக்கு வாய்ப்புகளோ அல்லது ஐடியாவோ கொடுத்தால் கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பது நல்லது உங்களை விட வயது குறைந்த நபர்களிடம் நிதானமாக செயல்பட வேண்டும் அவர்களுடன் சேர்ந்து எந்த ஒரு புதிய முயற்சியிலும் ஈடுபடக்கூடாது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் வண்டி வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை குடும்ப பெண்களுக்கு குடும்பத்தில் அதிக பொறுப்புகள் கொடுக்கப்படும் அதன் மூலமாக உங்களுடைய ஆளுமை திறமையை இன்று நியமிக்க முடியும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய நாள்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : வராகி அம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.