- தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பல்வேறு மாவட்டங்களில் செக்போஸ்ட், யூனியன் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது . இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- இஸ்ரேல் – காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள், பாலஸ்தீனியர்கள் எட்டு பேரை பொதுவெளியில் நிறுத்தி சுட்டுக் கொன்றுள்ளனர்.
- பல ரவுடிகளை பார்த்து விட்டு வந்திருக்கிறேன். என்னிடம் இந்த மிரட்டல் எல்லாம் வைத்துக்கொள்ளக்கூடாது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
- அதிவேக ரயில் போக்குவரத்தால் நகரங்கள் வளர்வதுடன், தொழில் வளர்ந்து வேலைவாய்ப்புகள் உருவாகும். சம்பளம் அதிகரிப்பதுடன், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், என ஆசிய வளர்ச்சி வங்கி நிறுவனத்தின் சிறப்பு வல்லுநர் கூறியுள்ளார்.
- வரும் 2030ம் ஆண்டு காமென்வெல்த் போட்டியை இந்தியாவின் ஆமதாபாத்தில் நடத்த காமன்வெல்த் விளையாட்டு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது நமது நாட்டுக்கே பெருமையளிக்கக் கூடிய விஷயம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- ஆறு மாதத்தில் ஆட்சி போனதும், சிறை சென்றுவிடுவோமோ? என்ற பயத்திலேயே திமுக அமைச்சர்களுக்கு கருப்புப் பட்டையைக் கண்டால் கூட அவர்களுக்கு சிறை ஞாபகம் தான் வருகிறது, என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
- மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு எதிரொலியாக, மேயர் இந்திராணி ராஜினாமா செய்தார். நாளை (அக்.,17) புதிய மேயர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
- 2040 ல் இந்தியர்கள் நிலவில் தரையிறங்க செய்வதற்கு இஸ்ரோ உறுதி பூண்டுள்ளது என அந்த அமைப்பின் தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
- நக்சல்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 18ல் இருந்து வெறும் 11ஆக குறைந்து உள்ளது. 2026ம் ஆண்டு மார்ச் 31க்குள் நக்சல் அச்சுறுத்தல் ஒழிக்கப்படும்’ என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 12வது இடத்துக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. இந்திய பாஸ்போர்ட் 85வது இடத்தில் உள்ளது.