- தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட அ.தி.மு.க. – பா.ஜ., கூட்டணியை வழி நடத்தப்போது அமித்ஷாவா அல்லது பழனிசாமியா என்ற கேள்வி எழுகிறது, என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறினார்.
- சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேசத்தினர் 5 பேர் திரிபுராவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது.
- உஸ்பெகிஸ்தானில் நடந்த மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடரில் தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
- தமிழக மக்களை மதத்தால், ஜாதியால் பிளவுபடுத்த, பா.ஜ., தொடர்ந்து முயற்சித்து வருகிறது,என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
- அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலுக்கு, ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மம்தானியை, 33, இடதுசாரி பைத்தியம் என குறிப்பிட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கருவறை முன் உள்ள சிறிய அர்த்த மண்டபத்தில் ஆளுங்கட்சியினரின் நெருக்கடியால் வி.ஐ.பி.,க்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்க ஏற்பாடு நடக்கிறது.
- அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி சுற்றி திரிவதால் எதுவும் நடக்காது அதனை மனதார மதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக சாடியுள்ளார்.
- ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ ஐ.நா., விமான போக்குவரத்து ஆணையம் முன்வந்தது. ஆனால், இதனை மத்திய அரசு நிராகரித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
- பீஹார் மக்கள் பற்றிய சர்ச்சை பேச்சு குறித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார்.
- ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டமிட்டோம். ஆனால், அவர் நிலத்துக்கு அடியில் அவர் சென்று பதுங்கினார், என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கூறியுள்ளார்.

















