- அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம் என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.
- ஆபரேஷன் சிந்துவின் கீழ் ஈரானில் இருந்து இதுவரை 3,400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இறைவனையோ இறை நம்பிக்கை உள்ளவர்களையோ விமர்சிக்காமல் இருப்பவர் முதல்வர் ஸ்டாலின். அதுவே இறைவனை வணங்குவதற்கு சமம் என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
- சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி ‘ரோடு ஷோ’ நடத்த இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
- நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- டிராகன் விண்கலம் வாயிலாக விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் இன்று( ஜூன் 26) சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றனர். சுபான்ஷூ சுக்லா அங்கு சென்றடைந்ததற்கு இந்தியர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். நான்கு பேரையும் அங்குள்ள விஞ்ஞானிகள் ‘Welcome Drink’ வழங்கி வரவேற்றனர்.
- ஆன்லைன் சினிமா விமர்சனங்களை தடுப்பது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்கு சமம் என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
- கிரெடிட் கார்டு உள்ளிட்ட கடன் தொகைகளை செலுத்தாமல் மோசமான சிபில் (CIBIL) ஸ்கோரை வைத்த ஊழியரின் பணி நியமனத்தை ரத்து செய்த எஸ்.பி.ஐ. வங்கியின் நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு தி.மு.க.வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார்.
- பா.ஜ., உடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க. எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியுள்ளார்.