- உக்ரைன் மீது நேற்று ஒரே நாளில், 620 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்l
- திறமையான மாணவர்களின் சிந்தனைகளை பயிற்சி மையங்கள் நசுக்கவதாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
- விம்பிள்டென் டென்னிசின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்தின் ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரது முதல் விம்பிள்டன் பட்டமாகும்.
- கோல்கட்டாவில் உள்ள ஐஐஎம் ஆண்கள் விடுதியில், பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ஆனால், பலாத்காரம் ஏதும் நடக்கவில்லை. அவர் ஆட்டோவில் தவறி விழுந்துவிட்டார். தற்போது நலமாக உள்ளதாக பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.
- போலி சமூக வலைதள கணக்குகளால் இந்தியா – ஈரான் நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு ஆபத்து என்று இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- கர்நாடகாவில் மலைப்பகுதியில் ஆபத்தான இடத்தில் உள்ள குகை ஒன்றில் வசித்து வந்த ரஷ்யாவை சேர்ந்த பெண்ணையும் அவரது இரண்டு பெண் குழந்தைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.
- மக்களின் செல்வாக்கை தி.மு.க., இழந்துவிட்டது. இதனால் தான் விடுபட்ட மகளிருக்கும், விதிகளை தளர்த்தி மாதம் ரூ. ஆயிரம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்,” என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டினார்.
- ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மெக்சிகோ, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.
- லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி துவக்க வீரர் கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.
- 2018ம் ஆண்டில் சில போயிங் 737 ஜெட் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் சிக்கலை அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் அடையாளம் கண்டறிந்தது. ஆனால் ஆய்வு செய்ய ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிடவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் 13-07-2025
