- தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்ற பயத்தினால், திமுக தற்போதே காரணம் தேடி அறிவித்துள்ளது, என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக, அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமையும், திமுக ஆட்சியில்தான் நடந்தேறுகிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் நேற்று (அக்டோபர் 30) முதல் வரும் நவம்பர் 4ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- பூடான் சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமானம் மோசமான வானிலை காரணமாக மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அவர் பத்திரமாக ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.
- போலீசில் திறம்பட பணியாற்றி ‘சிங்கம்’ என பெயர் எடுத்துள்ள இரண்டு அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
- குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, சுதந்திர போராட்ட வீரரும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் குடும்பத்தினரை சந்தித்து கலந்துரையாடினார். படேல் நினைவு நாணயம், தபால் தலையையும் வெளியிட்டார்.
- ஜெர்மனியில் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
- அணு ஆயுத சோதனையை துவங்க உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- ஆண்டுதோறும் 25 மில்லியன் மெட்ரிக் டன் அமெரிக்க சோயாபீன்களை வாங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
















