- ‘ஜாதியும், மதமும் தான் இங்கு அரசியலை தீர்மானிக்கிறது’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
- கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல் யார் யாத்திரை சென்றாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என 100 நாள் நடைபயணம் மேற்கொண்டு வரும் அன்புமணியை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.
- அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு, இரு கண்களிலும் பார்வை பறிபோன பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
- தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
- ”எனக்கும், கவினுக்கும் என்ன நடந்தது என்று எனக்கும், அவனுக்கும் மட்டும் தான் தெரியும்” என்று கொலை செய்யப்பட்ட கவினின் தோழி வீடியோ வெளியிட்டுள்ளார்.
- மாணவி தற்கொலை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் தலைமையிலான தொண்டர்கள் உரிமை மீட்பு குழு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
- இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம் இருப்பதாகவும், இது பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் தவிர அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
- வர்த்தகம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனில், அதில் இருந்து நாம் விலகலாம். இந்தியாவுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன, என்று காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கூறியுள்ளார்.
- ரஷ்யாவுடன் இந்தியா என்ன வர்த்தகம் செய்கிறது என்பதை பற்றி கவலையில்லை. ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மெட்விதேவ் மிக மோசமான விவகாரத்திற்குள் நுழைகிறார். என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.