- சென்னை அருகே அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி, 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க, காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஐந்து இடங்களை அடையாளம் கண்டு, ஆய்வு நிறுவனங்கள், ‘டிட்கோ’வுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளன.
- கிராமத்தில், டீக்கடை, தையல் கடை, சலவை கடை, பெட்டி கடை வைத்தால் கூட லைசென்ஸ் வாங்க வேண்டும் என்று அறிவித்து மக்களிடம் வசூலிக்கின்றனர்’ என முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசினார்.
- கர்நாடகாவில், போலி வக்கீல்கள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. அவர்கள் மீது, சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநில வக்கீல்கள் கவுன்சில் எச்சரித்துள்ளது.
- குஜ ராத்தில், கோத்ரா கலவரத்துக்கு பிந்தைய வன்முறை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மூன்று பேரை, ஆதாரங்கள் இல்லாததால், 19 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தமிழக மின் வாரியத்துடன் இணைந்து, நீரேற்று மின் நிலையத்தை அமைக்க, என்.எல்.சி., ‘ரென்யூவபிள்’ நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
- சிம்லா, ஹிமாச்சல பிரதேசத்தில், மேக வெடிப்பால் கொட்டி தீர்த்த கனமழையில் சிக்கி, மூன்று பேர் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மண்ணில் புதைந்தன.
- மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு தேர்தல் ஜுரம் இப்போதே சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
- ‘மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரத்தில், ஜனாதிபதியின் கடிதம் தொடர்பான விசாரணை, ஆக., 19ல் துவங்கும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
- யு.பி.ஐ., எனப்படும், உடனடி, ‘டிஜிட்டல்’ பணப்பரிவர்த்தனை செயலிகளில் பணம் அனுப்ப ரகசிய எண் பயன்படுத்துவதற்கு பதில் கைரேகை மற்றும் முக அடையாளம் பயன்படுத்தும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கும் போது போர் நிறுத்தத்துக்கு ஓப்புக் கொண்டது ஏன்? என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.