- ஜார்க்கண்டில் வெவ்வேறு இடங்களில் சத் பூஜை கொண்டாட்டத்தின் போது நீரில் மூழ்கி 15 பேர் உயிரிழந்தனர்.
- பொய்யான வாக்குறுதிகளை அளித்து பீஹார் இளைஞர்களை தேஜஸ்வி யாதவ் முட்டாளாக்குவதாக முதல்வர் நிதிஷ் குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (அக்., 29) அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து ரபேல் போர் விமானத்தில் பறக்கிறார்.
- பீஹார் தேர்தலை முன்னிட்டு, இண்டி கூட்டணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. பீஹாரை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார்.
- பீஹாரில் இளைஞர்களின் ஆசை, கனவுகளை தேஜ கூட்டணி அரசு அழித்துவிட்டது என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.
- 8 வது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
- ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு இரு மாநிலங்களில் ஓட்டு இருக்கும் விவரம் வெளிவந்துள்ளது.
- இந்தியாவில் ரஷ்யாவின் சுகோய் சூப்பர் ஜெட் SJ-100 விமானங்களை தயாரிப்பதற்காக, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், ரஷ்யாவின் நிறுவனமான யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
- சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலம் பம்பைக்கு, 100 சிறப்பு சொகுசு பஸ்கள், நவ., 16 முதல் ஜன., 16 வரை இயக்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அவரது மகன் பிரியங்க் கார்கே, இருவரும் இளைஞர்களை அவமதிப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.

















