- இந்திய வரைபடத்தில் குலசேகரப்பட்டினம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
- தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன்,’ஆர்எஸ்எஸ், பாஜவின் கட்டுப்பாட்டிற்கு அதிமுக சென்று விட்டது என்பது கவலையளிக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்’ என தெரிவித்தார்.
- நாடுகளுக்கு இடையே எந்தவித அழுத்தமும் இல்லாத வர்த்தகம் தேவை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். மேலும், உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவில் 16 வயது மகன் தற்கொலைக்கு சாட்ஜிபிடி உதவியதாக, ஓபன்ஏஐ மீது, பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
- வரி விதிப்பு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மத்திய அரசு வட்டார தகவல் வெளியாகியுள்ளது.
- மத்திய அரசு, மாவோயிஸ்ட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்லாண்டு காலமாக மாவோயிஸ்ட்கள் ஆதிக்கத்தில் இருந்த பல கிராமங்கள் மீட்கப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டு விட்டனர்.
- வரதட்சணை கொடுமையால், 2022ல் மட்டும் நாடு முழுவதும் 6 ஆயிரம் பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
- வாரிசு அரசியலை கிண்டல் செய்யும் வகையில் பீஹாரில் ராகுலின் நடைபயணத்தில் முதல்வர் ஸ்டாலின், தேஜஸ்வி பங்கேற்ற படத்தை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
- ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் அறிமுக விழா, அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் செப்.,9ல் நடக்கிறது.
- 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்தும் உரிமை கோரலுக்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 28 August 2025 | Retro tamil
