* இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, தூத்துக்குடியில் நடந்த விழாவில் 550 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன், 4,250 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார்.
* ”தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்ட தொகையை விட 3 மடங்கு அதிகம்,” என பிரதமர் மோடி கூறினார்.
* திருவனந்தபுரம்: கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* தாய்லாந்து, கம்போடியா எல்லை பிரச்னையில், தற்போதையை நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
* மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு, இதயத் துடிப்பை சீராக வைக்க உதவும், ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது.
* இதுவரை புதிய பள்ளிக் கட்டிடங்கள், எந்தெந்த மாவட்டம் மற்றும் ஊர்களில் கட்டியிருக்கிறீர்கள் என்று திமுகவுக்கு, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
* பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
* ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் செப்.,14ம் தேதி மோதுகின்றன.
* ”கடந்த 10 ஆண்டுகளில் நீட், யுஜிசி நெட், யுபிஎஸ்சி, பீஹார் தேர்வு வாரியம் உள்ளிட்டவை நடத்திய 80க்கும் மேற்பட்ட வினாத்தாளில் வெளிப்படையாக மோசடி நடந்துள்ளது. இதனால், 85 லட்சம் பேரின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது,” என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
* ”முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும்” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.