- ஏமன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முஸ்லிம் மத குரு காந்தபுரம் அபூபக்கர் முசலியார் தெரிவித்துள்ளார்.
- நடப்பாண்டில் விமானங்களில், 183 தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளது என, ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சிந்துார் நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் வெளுத்து வாங்கினார்.
- என் தாய் மாமா நல்லா படிச்சு டாக்டர் ஆகிட்டாரு; நான் சரியாக படிக்காமல் துணை முதல்வர் ஆகிட்டேன், என உதயநிதி பேசினார்.
- கோடி கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
- மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது சரியானதுதான்; எனவே இந்த விவகாரத்தில் ஜனாதிபதி விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்ப வேண்டும்’ என, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
- ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, வங்கிகளில் கோரப்படாத வைப்புத்தொகை 67,003 கோடி ரூபாய் உள்ளது என லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது என 3 வது நீதிபதி விசாரணையில் கோயில் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
- ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான, ‘நாசா’ உடன் இணைந்து, ‘நிசார்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.