- பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள சர் கிரீக் பகுதியில் இந்திய முப்படைகள் பெரிய அளவில் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் தனது வான்வெளியில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- சபரிமலை அய்யப்பன் கோவில், துவாரபாலகர்கள் சிலையில் இருந்து திருடப்பட்ட தங்கத்தில், 476 கிராமை, கர்நாடக மாநிலம் பல்லாரியை சேர்ந்த நகை வியாபாரியிடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் மீட்டுள்ளனர்.
- உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தச் செய்வதற்கு சீனா உதவி செய்யும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
- 2028 ல் நடக்க உள்ளஅதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது, என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
- உ.பி.,யைச் சேர்ந்த ஒருவர் தனது விருப்பத்துக்கு எதிராக சவுதி அரேபியாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை காப்பாற்ற வேண்டும் எனக் கதறி அழும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
- பீஹாருக்கு அறிவிக்கப்பட்ட 12 ஆயிரம் சிறப்பு ரயில்கள் எங்கே என கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல், மாநிலத்தில் இரட்டை இன்ஜின் அரசு அளித்தது அனைத்தும் வெற்று வாக்குறுதிகள் எனத் தெரிவித்துள்ளார்.
- லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வியை முதல்வர் ஆக்கவும், சோனியா தனது மகன் ராகுலை பிரதமர் ஆக்கவும் விரும்புகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
- இந்தியாவுக்கு எதிரான வழக்கமான போரில் பாகிஸ்தானால் வெற்றி பெற முடியாது, என அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ கூறியுள்ளார்.
- கிரிப்டோகரன்சியை இந்திய சட்டத்தின் கீழ் சொத்தாக அங்கீகரிக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
- பாமக செயல் தலைவர் பதவியை தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்குவதாக, நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

















