- கொலை முயற்சி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு முன் ஜாமின் வழங்கியது குறித்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தமிழகத்தில், கோவை, நீலகிரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- அண்டை மாநிலங்களில் சாகுபடி குறைந்துள்ளதால், தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்து வருகிறது.
- 2019 ல் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சி.பி.ஐ.,விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்தெரிவிக்கப்பட்டது.
- இந்தியா விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, கம்போடியாவில் இருந்த 12 நாடுகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- வங்கி மோசடி புகார் தொடர்பாக, அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மீது, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களை திருப்பி ஒப்படைக்கவும், அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
- இறந்தவர்களையும், வெளிநாட்டினரையும் பீஹார் வாக்காளர் பட்டியலில் சேர்க்க அனுமதிக்க வேண்டுமா?, என, எதிர்க்கட்சியினருக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
- பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இந்திய மூங்கில் ரகத்தைப் பயன்படுத்தி, அதிக திறன் உடைய வாகன உதிரிபாகங்களை உருவாக்கி, அசாமின் குவஹாத்தி ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
- உலக கோப்பை செஸ் தொடரின் பைனலுக்கு இந்திய வீராங்கனைகள், ஹம்பி, திவ்யா இருவரும் முன்னேறினர்.
- அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் ஆலைகளை கட்டுவதற்கும், இந்தியர்களை வேலைக்கு எடுக்கவும் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 25 July 2025 | Retro tamil
