- மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 29ம் தேதி வரை மழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
- உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப், காம்பவுண்டு பிரிவில் இந்திய ஆண்கள் அணி இரண்டு தங்கப்பதக்கம் கைப்பற்றியது.
- மதுரை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை, த.வெ.க., தலைவர் விஜய், ‘அங்கிள்’ என வார்த்தைக்கு வார்த்தை கூறி கிண்டல் செய்து பேசினார். அவரது கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்திலும் ஆளுங்கட்சியை தாக்கி பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது என தகவல் வெளியாகி இருக்கும் சூழ்நிலையில், படத்தை வெளியிட வினியோகஸ்தரர்கள், திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல் பரவி உள்ளது.
- ரஷ்யா தொடர்ந்துள்ள போரால், ‘ட்ரோன்’ உள்ளிட்ட புதுமையான ஆயுதங்களுக்கு எழுந்துள்ள தேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உக்ரைனில் உள்ள தொழில்நுட்ப ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் பலவும் ஆயுதத் தயாரிப்புக்கு மாறியுள்ளன.
- காங்கிரஸ் ஆட்சி நடத்தும் மாநிலங்களில், ஆளும் கட்சி அரசியல்வாதிகள், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., என, மத்திய புலனாய்வு அமைப்புகள், வழக்குகளில் சிக்கி தவிக்கின்றனர். ஆனால், காங்கிரசின் கர்நாடக முதல்வர் சித்தராமையா இதற்கு விதிவிலக்கு. இவருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே ஒருவித பாசமோ, பந்தமோ ஏதோ ஒன்று உள்ளது. இதற்கு முக்கிய காரணம், சித்தராமையா ஒரிஜினல் காங்கிரஸ் காரர் கிடையாது. காங்கிரசுக்கு எதிரான, ஜனதா கட்சி, ஜனதா தளம் என, பல கட்சிகளில் இருந்தவர்; அதன்பின் தான், காங்கிரசில் இணைந்தார்.
- நாட்டின் முதல், ‘வந்தே பாரத் பார்சல்’ ரயில் தயாராகி விட்டது. ஓரிரு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும். இதில், ஒரே நேரத்தில், 264 டன் சரக்குகளை ஏற்றிச் செல்லலாம் என, சென்னை ஐ.சி.எப்., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அகில இந்திய ஒதுக்கீட்டில் கூடுதலாக, எம்.பி.பி.எஸ்., இடங்கள் சேர்க்கப்படுவதால், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் தாமதமாகும் என, மத்திய மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது. அதேநேரம், தமிழகத்தில் மருத்துவ இடங்கள் உயர வாய்ப்பில்லை என, மாநில மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
- வங்கதேசம் – பாகிஸ்தான் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரியான உறவு இல்லாத நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் நேற்று இரண்டு நாள் பயணமாக நேற்று வங்கதேசம் சென்றார்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2,000 ஏக்கரில் அமைய உள்ள ஓசூர் விமான நிலையத்துக்கு, சூளகிரி தாலுகாவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சென்னை, கோவைக்கு அடுத்து, முக்கிய தொழில் நகரமாக, ஓசூர் உருவெடுத்து வருகிறது.
- ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பான ஜமாத் – இ – இஸ்லாமியின் பிடியில் இருந்த 215 பள்ளிகளை, அந்த யூனியன் பிரதேச அரசு கைப்பற்றியுள்ளது. மொத்தம் 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை, அந்தந்த மாவட்ட நிர்வாகம் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள், அவற்றிற்கு நிதியுதவி செய்யும் குழுக்கள் போன்றவற்றை கண்டறிந்து, மத்திய அரசு தடை விதித்து வருகிறது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 24 August 2025 | Retro tamil
