- 2045ம் ஆண்டுக்குள் லட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள் என அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோஸ் கூறியுள்ளார்.
- ஆப்பரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் நொறுக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட வலியை இன்றும் அந்நாடு மறக்க முடியாது, என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
- கோல்கட்டாவில் இருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானத்தில் எரிபொருள் கசிவு கண்டறியப்பட்டதால் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
- இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாடு தொடங்கியது.செப்டம்பர் 10, 2025 அன்று நடைபெற்ற நாடு தழுவிய சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐஆர்)ஆயத்த மாநாட்டின் தொடர்ச்சியாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
- மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யநாதெல்லா 2025ம் ஆண்டில் 96.5 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் 846 கோடி ரூபாய்) சம்பளமாக பெற்றுள்ளார்.
- செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க தொகுதி எம்எல்ஏவான தன்னை அழைக்காத அதிகாரிகளை செல்வப்பெருந்தகை கடிந்து கொண்டார்.
- வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மது விற்பனை உச்சம் பெற்றுள்ளது என்றால், அரசு இயந்திரத்தின் மொத்த வளங்களையும் கவனத்தையும் சாராய விற்பனையில் தான் திமுக செலவழித்துள்ளது என்பது தானே அர்த்தம்? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
- வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- ஈட்டி எறிதல் போட்டியில் அதிக தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.
- திட்டங்களுக்கு ஹிந்தியிலும், சமஸ்கிருதத்திலும் பெயர் வைப்பது, கீழடி அறிக்கை போன்றவற்றிற்கு பதில் வருமா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

















