- அசாமில் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவர்களால் 10 லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா குற்றம்சாட்டி உள்ளார்.
- மருத்துவ காரணங்களுக்காக, துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக ஜக்தீப் தன்கர் அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
- வரும் ஜூலை 30ம் தேதி அன்று மாலை இஸ்ரோ, நாசாவுடன் இணைந்து தயார் செய்துள்ள நிசார் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட உள்ளது.
- டில்லி விமான நிலையத்தில் இருந்து, கோல்கட்டா புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் 160 பேர் கடும் அவதி அடைந்தனர்.
- விமான விபத்து சம்பவம் தொடர்பாக வங்கதேசத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலின் வழிபாடு மற்றும் பிரசாதத்திற்கு நாட்டு மாடுகளின் பால் மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிய மனுவை, சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.
- லோக்சபாவில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி 16 மணி நேரம் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
- ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
- தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 10 படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, முன்னாள் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா, தற்போதைய தலைமைச்செயலாளர் முருகானந்தம் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகி மன்னிப்பு கோரினர்.