- ஜிஎஸ்டி வரி குறைப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தொழில் துறையினருக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்தார்.
- மனிதாபிமான அடிப்படையில் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கருத்தில் கொள்வர் என்று எதிர்பார்க்கிறோம் என, ஹெச்1பி விசா கட்டண விவகாரம் தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.
- டெல்டா விவசாயிகளிடம், நெல் மூட்டைக்கு 40 ரூபாய் வீதம் கமிஷன் அடிக்கும் கொடுமை நடக்கிறது, என்று திருவாரூரில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் விஜய் பேசினார்.
- கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள்? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘நீங்கள் கட்சியில் சேருங்கள் நான் சொல்கிறேன்’ என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பதிலளித்தார்.
- நடிகர் மோகன் லால் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- குஜராத் விழாவில் கதறி அழுத சிறுவனிடம், ”உன் முகவரிக்கு நானே கடிதம் எழுதுகிறேன், அழக்கூடாது,” என்று ஆறுதல் கூறிய மோடி, ”சின்னஞ்சிறு குழந்தைகளின் அன்பை பெறுவதை காட்டிலும், இந்த வாழ்க்கையில் வேறு எதுவும் பெரிதில்லை,” என்றார்.
- ஐரோப்பிய பயணமும், ஆக்ஸ்போர்டு நினைவுகளும் என்ற தலைப்பில், மக்களுடன் ஸ்டாலின் செயலியில் வந்துள்ள கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பதில் அளித்தார்.
- ஹெச் 1பி விசாவுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அதிபர் டிரம்ப் உத்தரவு, தாயகம் வந்துள்ள இந்தியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு, இல்லையா என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
- தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான அரசா? அல்லது சிறுநீரகத் திருடர்களுக்கான அரசா? என்று பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.