- பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகளை பயன்படுத்தி, இந்தியாவின் முன்னணி கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தளமான காயின்டிசிஎக்ஸை(CoinDCX) ஹேக்கர்கள் முடக்கினர். இதனால் 44 மில்லியன் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் ரூ.368 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது.
- நேற்று நடைபெற்ற மேஜர் லீக் கால்பந்தில், இன்டர் மியாமி அணி என்.ஒய் ரெட் புல்ஸை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
- சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதம் உள்ளது. ராணுவத்துக்கு ரகசியம் உள்ளது போல், எல்லோருக்கும் ரகசியம் உள்ளது, என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சட்டசபை தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் இவ்வறு பதிலளித்தார்.
- அமைச்சர் நேருவுக்கு பதிலடி தரும் வகையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை; ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற லட்சியத்துடன், ஜூலை 7ம் தேதி தொடங்கிய எழுச்சிப் பயணம் இமாலய வெற்றி பெற்றது.
- மாநில அளவிலான கொள்கை விளக்க முதல் பொதுக் கூட்டம், இன்று (21.07.2025) திங்கள்கிழமை, மாலை 04.00 மணி அளவில் சேலம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது என்று த.வெ.க., அறிவித்துள்ளது.
- இயக்குனர் வெற்றிமாறன், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் ‛பேட் கேர்ள்’. இந்த படத்தை வர்ஷா பரத் என்பவர் இயக்கி உள்ளார். கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டபோது அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதில், டீன்ஏஜ் பெண்களின் எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு, மனச்சிக்கல் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
- ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல என்று இ.பி.எஸ்., பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
- மாநில தலைவர் பதவியே ஒரு வெங்காயப் பதவி என்று கூறியவன் நான். உரிக்க உரிக்க உள்ளே ஏதும் இருக்காது’, என்று பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
- உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களது முக்கிய இலக்கை அடைவதில் உள்ளோம், ” என ரஷ்யா அதிபர் புடின் கூறியுள்ளார்.