- காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 46.சங்கர் குடும்பத்திற்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
- நாங்கள் பூஜை போட்டு அரசியலுக்கு வரவில்லை. தேர்தல்களில் நாம் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டோம் என, ம.நீ.ம., தலைவர் கமல் கூறியுள்ளார்.
- திமுக, அதிமுகவை அழிக்க போராடிக் கொண்டு இருக்கும் போது மீண்டும் அண்ணாதுரை, எம்ஜிஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
- கரூரில் நடந்த முப்பெரும் திமுக அரசில் சாராயம் விற்ற பணத்தில் தான் நடத்தப்பட்டு உள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
- ‘இந்தாண்டு டிசம்பர் மாத இறுதிக்குள், ஆளில்லா ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதில் வயோமித்ரா என்ற இயந்திர மனிதனை அனுப்ப உள்ளோம்” என இஸ்ரோ தலைவர் தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
- காசா மூச்சு திணறுகிறது. உலக நாடுகள் கவனிக்காமல் இருக்க கூடாது. காசாவில் நடப்பவை நெஞ்சை உருக்குகின்றன என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- மஹாராஷ்டிராவில் சட்டசபை தேர்தலுக்கு பிறகு 15 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் கட்சிகளிடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- வங்கியில் 200 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தது மற்றும் பினாமி சொத்துக்கள் தொடர்பாக, சென்னை மற்றும் ஹைதராபாதில், சசிகலாவின் பினாமி வீடு உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- அதானிக்கு எதிராக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்த குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை, என பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம்( செபி) தெரிவித்துள்ளது. இதனையடுத்து பொய்க்கதைகளை பரப்பியவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதானி கூறியுள்ளார்.
- போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அமெரிக்காவுக்கு செல்வதை தடுக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கி உள்ளது. இதன்படி, அந்த கடத்தலில் தொடர்பு என சந்தேகப்படும் இந்தியாவைச் சேர்ந்த சில தொழிலதிபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு விசா மறுக்கப்பட்டு உள்ளது.