- தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. ஓழுங்கு இருக்கிறதா. ஒழுங்கற்ற கூட்டத்திடம் சட்டம் ஒழுங்கு இருக்கிறது, என என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
- மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் சார்பில், கடந்த 2014 ம் ஆண்டு தூய்மை பாரதம் திட்டம் துவங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் உள்ளாட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
- நாட்டில், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வருமானம், 2022- – 23ம் நிதியாண்டில், 223 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.
- ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக அறக்கட்டளை ஒன்றை ,டாடா நிறுவனம் துவக்கி உள்ளது.
- கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. 3 மாவட்ட கல்வி நிலையங்களுக்கு முன் எச்சரிக்கையாக விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
- நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முக்கியமானவர்கள்.அவர்களை பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
- கூட்டணியில் அங்கம் வகிப்பதால், தி.மு.க.,வுக்கு கம்யூ., கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டன. தி.மு.க.,விடம் பணம் வாங்கியதால், மக்கள் பிரச்னையை கூட அக்கட்சிகள் வெளியே கொண்டு வர முடியவில்லை, ” என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.
- மயிலாடுதுறை மதுவிலக்குப்பிரிவு டி.எஸ்.பி., சுந்தரேசன் கூறிய புகார்கள் தொடர்பாக, தஞ்சை மண்டல டி.ஐ.ஜி., இன்று நேரில் விசாரணை நடத்தினார்.
- போலி சிம்கார்டு வாங்கியது உள்ளிட்ட 8 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் ரூபேஷ்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை செஷன்ஸ் நீதிபதி அறிவொளி தீர்ப்பளித்தார்.
- ஆட்சி முடியும் தருவாயில் பக்தர்கள் மீது இந்து அறநிலையத்துறைக்கு அப்படி என்ன திடீர் பாசம்’ என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 July 2025 | Retro tamil
