Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 | Retro tamil

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அல்லது போர்களில் இறந்தவர்களை விட சாலை விபத்துகளில்அதிகம் பேர் உயிரிழக்கின்றனர் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

வறுமையை ஒழிக்கவும், செழிப்பை அடையவும் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் நேரு குறித்த 51 ஆவணங்களில் என்ன ரகசியமாக வைக்கப்படுகிறது, என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

2026ம் ஆண்டு குடியரசு தின சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய தலைவர்கள்உர்சுலா வான் டெர் லேயன், அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கப்படாததை கண்டித்து மதுரையில் முருக பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பக்தர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் கார்வார் பகுதியில் நாட்டின் முக்கிய கடற்படை தளம் உள்ளது. இதன் அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட ஒரு கடல் புறா, பறக்க முடியாத நிலையில் பிடிபட்டது.

ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, இரண்டு நாடுகளின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

வறுமையின் பிடியில் சிக்கியுள்ள உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது, என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் வெறும் மாஸ் காட்டி பிரயோஜனம் இல்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், பொருளாதாரத்தின் டிஎன்ஏவை மாற்றியுள்ளன, என பிரதமர் மோடி கூறினார்.

Exit mobile version