Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 | Retro tamil

புவி வெப்பமயமாதல் தடுப்பு நடவடிக்கையில் தமிழகத்தை ஐ.நா.வே பாராட்டி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உற்பத்தி என்பது வலுவான பொருளாதாரங்களின் முதுகெலும்பாகும். துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் உற்பத்தி குறைந்து வருகிறது, என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.

2026ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மணல் மற்றும் கனிம வளக் கொள்ளைக் கும்பல் பணம் மற்றும் அரசியல் பலத்தால் மாபியா போல் செயல்படுவதாக கூறியுள்ள சென்னை ஐகோர்ட், மணல் கொள்ளையை தடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் பொறுப்பு என உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது. அப்படி நடந்தால் அரசியல் சட்ட இயந்திரம் முடங்க வழி வகுத்து விடும், என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் கிளை மதுரை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் சில குறிப்பிட்ட ரயில்களுக்கான பயண டிக்கெட் நிலை விதிகளை இந்திய ரயில்வே மாற்றி அமைத்துள்ளது.

சர்வதேச வர்த்தகத்தில் வரிவிதிப்பு என்பது ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்க எம்பி கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அக்கட்சி அமைத்துள்ளது.

எத்தியோப்பியாவும், எனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் தாயகமாக இருப்பதால், வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன். என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சிரியா, மாலி உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வர தடை விதித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version