- சீன விஞ்ஞானிகள் மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
- தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையத்தின் அவசர கட்டுப்பாட்டு மையத்தை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், அதில் இடம் பெறும் சிறப்பு வசதிகள் குறித்து நீளமான பட்டியல் வெளியிட, ரியல் எஸ்டேட் ஆணையம் தடை விதித்துள்ளது.
- இரண்டு நாள் பயணமாக நேற்று நேபாளம் சென்ற நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலியை சந்தித்தார்.
- நெல்லையில் இளைஞர் கவின், ஆணவக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சி கலெக்டர் அலுவலகம் முன், புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தின் எந்தத் தொகுதிக்கும் எதையும் செய்யவில்லை. கொள்ளையடிப்பதிலேயே தி.மு.க.,வினர் மும்முரமாக இருக்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் என்ன திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினோமோ, அந்த திட்டங்கள் தான் இன்றளவிலும் நடைமுறையில் உள்ளன.
- துாய்மை பணியாளர்கள் பிரச்னையை அம்பேத்கர் பார்வையில் தான் அணுக வேண்டும். அவர்களை பணி நிரந்தரம் செய்தால், அந்த தொழிலையே செய்யுங்கள் என கூறுவது போன்றதாகும்.
- ”பா.ஜ.,வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் ஓட்டுத் திருட்டில் ஈடுபட்டு வருவதை ஒட்டுமொத்த நாடும் அறிந்துள்ளது. பீஹார் தேர்தலையும் திருடும் முயற்சியாக, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன” என, காங்கிரஸ் எம்.பி.,யும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
- துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன், 68, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 August 2025 | Retro tamil
