- சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபையின் மேற்கு நுழைவாயிலில் இருந்து, பக்தர்கள் ஒரே நேரத்தில் உள்ளே, வெளியே வர அனுமதிக்கப்படும் பகுதியை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என, சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிகமாக பட்டாசு கடைகள் வைக்க, அக்., 15 வரை, தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு, 7,313 விண்ணப்பங்கள் வந்துள்ளன. நிரந்தரமாக பட்டாசு கடைகள் வைக்க, 2,890; ஒரே இடத்தில், பல பட்டாசு கடை கள் வைக்க, 38 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
- வடகிழக்கு பருவமழை வெள்ள கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணிக்கு, ஏழு தலைமை பொறியாளர்களை, நெடுஞ்சாலை துறை நியமித்துள்ளது.
- பள்ளி மேலாண்மை குழுவால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல், அவர்களின் தீபாவளி கனவை தகர்த்துள்ளது, கல்வித்துறை.
- அக். 17- கிட்னி திருட்டு தொடர்பாக போராடப் போகிறோம் எனக்கூறி, ‘கிட்னி ஜாக்கிரதை’ என்ற வாசகம் அச்சிடப்பட்ட பேட்ஜ்களை, சட்டையில் அணிந்து வந்த அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள், அவற்றை எடுத்து தங்கள் சட்டை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு, சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருடப்பட்டது. கிட்னிக்கு சில லட்சம் ரூபாயை கொடுத்து விட்டு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக, பல கோடி ரூபாய் சம்பாதிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் கடன் அதிகரிப்புக்கு யார் காரணம்’ என, முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- விண்வெளி ஆய்வுகளில் நாடுகளுக்கு இடையேயான போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம், என, சத்குரு தெரிவித்தார்.
- வழக்கு ஒன்றை தீர்த்து வைப்பதற்காக 5 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய டிஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.
- ரஷ்ய-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புடினும் அதிபர் டொனால்டு டிரம்ப்பும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- அன்னியச் செலாவணி கையிருப்பு மிகவும் குறைவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மாலத்தீவு அரசு, தாயகத்துக்கு பணம் அனுப்பும் வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் அங்கு பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள், பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.