- மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை, சரண கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது.
- ‘தந்தைக்கு சிறுநீரகம் அளித்த என் மீது அவதுாறு கருத்துகளை கூறியதுடன், என்னை செருப்பால் அடிக்கவும் முயற்சிகள் நடந்தன’ என, ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
- ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஆகிய முப்படைகளிடையே ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் தேவை என, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் கூறினார்.
- டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி உயிரிழந்த டாக்டர் உமர் மற்றும் கைதான டாக்டர்கள் முஸாமில் கனி, ஷாஹீன் உள்ளிட்டோருக்கு நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு ஹவாலா நெட்வொர்க் மூலம் 20 லட்சம் ரூபாய் அனுப்பியது தெரியவந்துள்ளது.
- அரசு வேலை வாங்கி தருவதாக 2.50 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் கலாநிதி மற்றும் அவரின் மனைவி ராஜலட்சுமி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் நிலையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். இதனால், சென்னை, செங்கல்பட்டு உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கான, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகள் அமைத்து ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஒரே கட்சி தே.மு.தி.க., மட்டுமே என பொதுச்செயலாளர் பிரேமலதா மதுரையில் பேசினார்.
- கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக, முட்டை கொள்முதல் விலை, 600 காசுகளை எட்டி, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
- வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- காசா போர் நிறுத்தம், ஈரான் அணுசக்தி திட்டம் மற்றும் சிரியா குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தொலைபேசியில் விரிவாக விவாதித்தனர்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 November 2025 | Retro tamil
