- எத்தியோப்பியாவின் உயரிய விருது பெற்றது மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- உயர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, முருக கடவுள் பற்றி கிண்டலடித்த வழக்கறிஞர் ஜோதி மன்னிப்பு கேட்க வேண்டும் என, ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
- சமணர்கள் தங்களின் உயிர் கொல்லாமை கொள்கையால் இருட்டும் முன்பே இரவு உணவை சாப்பிடும் வழக்கம் உடையவர்கள். சமணர்கள் இரவில் தீபம் ஏற்றுவர் என்ற கருத்து தவறானது என, தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறினார்.
- திருப்பரங்குன்றம் பிரச்னையில் தி.மு.க., தேவையின்றி மதக்கலவரத்தை துாண்டுகிறது என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
- பென்டானில் என்ற வலி நிவாரண மருந்தை பேரழிவு ஆயுதம் என வகைப்படுத்தி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார்.
- இந்தியா – ஜோர்டான் இடையேயான இரு தரப்பு வர்த்தகத்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 45,000 கோடி ரூபாயாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துஉள்ளார்.
- தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவை ரத்து செய்யக் கோரி, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி, லோக்சபா, ராஜ்யசபாவுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
- ‘மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் பெயரை, ‘விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்’ என மாற்றுவதை ஏற்க முடியாது.
- தி.மு.க., நிர்வாகியை தாக்கிய விவகாரத்தில், சீமான் உள்ளிட்ட 16 பேர் மீது, நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
- அ.தி.மு.க., ஆட்சி யில் துவங்கப்பட்ட 11 மருத்துவ கல்லுாரி களில் முறைகேடு எதுவும் இல்லை என தமிழக அரசு கூறியிருப்பது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனி சாமிக்கு, தி.மு.க., அரசு அளித்துள்ள நற்சான்றிதழ் என, அ.தி.மு.க., கூறியுள்ளது.

















