- துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக சிரியாவில் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், அந்நாட்டின் ராணுவ தலைமையகம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது.
- உத்தவ் தாக்கரே விரும்பினால் பா.ஜ., உடன் கூட்டணிக்கு வரலாம், என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கூறியுள்ளார்.
- தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கே முதல்வர் ஸ்டாலின் வேட்டு வைக்கிறார். அசிங்கப்பட்டு தி.மு.க., கூட்டணியில் அக்கட்சிகள் நீடிக்க வேண்டுமா, என அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
- காமராஜரை கொச்சைப்படுத்தி பேசிய திருச்சி சிவா, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
- தமிழகத்தில் இரு வெவ்வேறு அரசுப் பள்ளிகளில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், சினிமா மோகத்தை விட்டுவிட்டு, எப்போதுதான் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பாரோ? என்று பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
- வலுவாக இருக்கும் அ.தி.மு.க.,வை கூட்டணி ஆட்சி என பேசி பலவீனப்படுத்த பா.ஜ., முயற்சி செய்கிறது, என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
- லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் 15 நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா, குடும்பத்துடன் சேர்ந்தார். அவரை மனைவி மற்றும் மகன் கட்டியணைத்து வரவேற்றனர்.
- இஸ்ரேலின் குற்றங்கள் அனைத்திற்கும் அமெரிக்கா துணை போகிறது என ஈரான் தலைவர் கமேனி குற்றம் சாட்டினார்.
- இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், ”இந்தியாவிற்குள் நுழைய போகிறோம்” என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 July 2025 | Retro tamil
