- தமிழகம் மட்டும் அல்லாமல் தெலுங்கானாவிலும் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக பாஜவில் சேர்ந்தேன், என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
- நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகமே என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.
- ஜிஎஸ்டி குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்பு மகிழ்ச்சி. ஜிஎஸ்டி வரி என்கிற அந்த முறையே கைவிடப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
- திரையுலகில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் ஏழு மாதங்களில் நாய்க்கடியால், 3.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ‘ரேபிஸ்’ நோயால், 20 பேர் உயிரிழந்துள்ளனர். நாய்க்கடிக்கான தடுப்பூசி போட்டிருந்தாலும், தொடர் சிகிச்சை அவசியம்’ என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
- சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களைத் தேடிப் பிடித்து, அவர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்த்து, அவர்கள் பெரிய குற்றங்களில் ஈடுபடும்போதும் கண்டுகொள்ளாமல், அவர்கள் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே குறியாக இருப்பது திமுக கட்சியின் வரலாறு, என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
- சென்னையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தில், தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியது சர்ச்சையாகி உள்ளது.
- ஜிஎஸ்டியில் மாற்றம் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், 4 அடுக்குகளாக இருக்கும் அந்த வரியை 2 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டிரம்ப்-புடின் சந்திப்பின் போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாக போவது இல்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
- சர்வதேச அளவிலான பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வைக்கிறது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 16 August 2025 | Retro tamil
