- ம.பி.,யில் இருமல் மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட டாக்டர் மருந்து நிறுவனங்களிடம் 10 சதவீதம் கமிஷன் பெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையிலும், காசாவில் வெடித்த உள்நாட்டு சண்டையில் 32 பேர் கொல்லப்பட்டதால், அங்கு பதற்றம் தொடர்கிறது.
- எகிப்தில் நடந்த காசா அமைதி மாநாடு, டிரம்ப்பை புகழ்வது போலவும் நடந்ததாலும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்றதாலும் அம்மாநாட்டில் பிரதமர் பங்கேற்காதது சிறந்த முடிவு என நிபுணர்கள் பாராட்டுகின்றனர்.
- பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா எடுத்த ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ தவிர்க்க முடியாத ஒன்று. அதற்கு முன்னதாக எதிரிகளை தடுக்கும் வகையில் எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, என டில்லியில் நடந்த ஐ நா சபை மாநாட்டில் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்(டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய் கூறியுள்ளார்.
- விபத்து,ஒலி இல்லாமல் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு, பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- துணை முதல்வர் உதயநிதியின் சிறப்பான பணியை பார்க்கும்போது, விளையாட்டு துறையையும் நானே கவனிக்கலாமே என எனக்கு தோன்றுகிறது, என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
- தொழில் முதலீடு குறித்த திமுக அரசின் அறிவிப்புகளில் 90 சதவீதம் பொய் மூட்டை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
- அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் எங்கிருந்து வருகிறது திமுக அரசுக்கு? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
- டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், உங்களுக்கு சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் உள்ளே நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா, என அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பினர்.
- ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வெளியிட்டதற்காக முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.